செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறதா அரிசி?


avatar

சமீப காலமாக எனக்குள் பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது நாம் சாப்பிடும் அரிசியைப் பற்றிய சந்தேகமாகும். உடனே எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க வேண்டாம். இது சந்தேகம் மட்டும் தான்.

நான் என்ன பண்ணுறது? என்னை படைத்த கடவுள் இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைக்கிறார். ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்றால்? நூடுல்ஸ் தான் அதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் அரிசியின் விலை உயர்ந்தும் வருகிறது. ஸ்ட்ரீம் ரைஸ், டீலக்ஸ் ரைஸ் என்று பல புதிய பெயர்களில் புதிய வகை அரிசிகள் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

ஆனால், நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் இப்படிப்பட்ட அரிசி வகைகளை நான் இது வரையில் கேள்விப்பட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை. 18 ரூபாயில் விற்பனைக்கு வந்த ஸ்ட்ரீம் ரைஸ் குறுகிய காலத்திலேயே 25, 30 ரூபாய்கள் என்ற விலையேற்றம் நடந்துள்ளது.

எனவே அரிசிகள் விளைவிக்கப்படவில்லை, மாறாக தயாரிக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.

சொன்னா நம்பவா போறீங்க... நான் பதிவு செய்கிறேன், காலம் பதில் சொல்லட்டும்!!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!