காதலின் கதை!


ANTHAPPAARVAI


பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்….

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர், பல முறை இருவரும் தனிமையில் சந்தித்து பேசிக் கொள்வதும் உண்டு. ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது.

ஒரு நாள், அந்தக் காதல் ஜோடி தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்து விட்டு ஊராரிடம் சொல்லி விடுகிறார்...

பஞ்சாயத்து கூடுகிறது…

அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தனர், காதல் என்ற சொல் அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா? அதனால் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல கூச்சப் பட்டனர், பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்...

சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார், நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத் தொடங்கினார்…

அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு, தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்" எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித் தழுவிக் கொண்டிருந்தனர்" என்பதை சுருக்கி சபை நாகரீகம் கருதி, அவர்கள் இருவரும் "காதல்" கொண்டிருந்தனர் என்று கூறினார்.

அப்போது தான் "காதல்" என்ற சொல் பிறந்ததது!

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்….

கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான். தண்டனைக் காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக் கொண்டிருந்தாள்...

பிறகு வேறு வழியின்றி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்து கொண்டு காத்திருந்த போது இணைந்தது!

காதல் என்ற வார்த்தை தோன்றியது என்னவோ காமத்தில் தான்.
ஆனால், அந்தக் காதல் இணைந்தது காத்திருந்ததில் தான்!!

எது உண்மையான காதல் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

@அந்தப்பார்வை."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!