'மறுபடியும் ஒரு காதல்' உருவான கதை [ உண்மை கதை ]


avatar

கதையே இல்லாமல் பல படங்கள் வெளியானாலும், சில படங்கள் அழுத்தமான கதையோடு வெளியாவதும் உண்டு. அந்த வகையில் நாளை (15.06 .2012) வெளியாக இருக்கும் 'மறுபடியும் ஒரு காதல்' படத்தின் கதையும் ரசிகர்களின் மனதை பாதிக்கக் கூடிய அழுத்தமான கதையாகும்.

இப்படத்தின் கதை உருவானதைப் பற்றி இயக்குநர் வாசு பாஸ்கர், கூறும் போது அதுவே ரொம்ப சுவாரஸ்யமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

இப்படத்தின் இயக்குநர் வாசு பாஸ்கர் ஒரு முறை விமானப் பயணம் மேற்கொள்ளும் போது, மூன்று மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதாகி விட்டதாம். அப்போது உடன் வந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தாராம். இலங்கைத் தமிழரான அவர், சிறுவயதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடிதம் மூலமாகவே காதலித்து வந்தாராம். ஒரு முறை கூட இருவரும் நேரில் சந்தித்ததும் இல்லையாம்.

பிறகு சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறியவர் ஒரு கட்டத்தில் அந்த காதலியை மறந்தே போனார். வயதான காலத்தில் இவரது மனைவி ஒருநாள், சிறுவயது காதல் சம்பவங்கள் ஏதாவது இருந்தால் கூறுங்களேன் என்று கேட்க, இந்த சம்பவத்தை பெரியவர் சொன்னவுடன், அவருடைய மனைவி சட்டென்று கண்கலங்கி அழுதாராம்.

"எதுக்காக அழறே, இந்த வயசுலயா நான் அந்த நாகப்பட்டினம் பெண்ணைத் தேடப் போறேன்? என்று அந்த பெரியவர் ஆறுதல் சொல்ல, அதற்கு அந்த பாட்டி சொன்னது தான் அதிர்ச்சியை கொடுத்தது.

"நீங்க சொன்ன அந்த நாகப்பட்டினம் பெண் நான் தான்.!!" என்று சொன்னாராம்.

இந்த கதையை கேட்டவுடன் தான் வாசு பாஸ்கர் மனதில் 'மறுபடியும் ஒரு காதல்' படத்தின் கதை உருவானதாம்.

உருவான கதை ரொம்ப நல்லா இருக்கு. அனா, அதுக்கு எப்படி வாசு பாஸ்கர் உருவம் கொடுத்திருக்கார் என்பது நாளை காலை தெரிந்து விடும்!!

"வேதா" திரைப்படத்தைத் தாயாரித்தவர் "மறுபடியும் ஒரு காதல்" மூலம் மறுபடியும் தயாரிப்பாளர் ஆனதோடு இயக்குனராகவும் அரிதாரம் பூசியுள்ளார். இவர் மறுபடியும், மறுபடியும் நிறைய திரைப்படங்களைத் தரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு!

குரல்: "திரும்பத் திரும்பப் பேசுற நீ....!"

ஆம் சொல்ல மறந்திட்டேன்... அரசியல் ஈடுபாட்டின் இடைவேளைக்குப் பிறகு நம்ம வடிவேலு இந்தப் படத்துல சிறப்பான காமெடி பண்ணியிருக்காராம்!

100 வது பதிவு!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!