வி.டி.ஆர் படத்துக்கு ஏ.ஆர்.ஆர். இசை?


DNA315


உளுந்தம் வடைய உடைச்சா 'மடேல்'னா சத்தம் கேட்கும்? ஆனா உடைக்காத உளுந்தம் வடைக்கு ஒரேயடியா சப்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அது வேறொன்னும் இல்ல. மன்மதன் படத்தின் செகண்ட் பார்ட் எடுக்கப் போகிறாராம் சிம்பு. இப்படத்தின் முதல் பார்ட்லேயே, பார்ட் பார்ட்டாக கழண்டு போன அப்படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு இந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ?

ஆனால் இதன் பிளானிங் இருக்கே, அது எல்லா ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்ட்ரஸ்ட்டிங் ஏரியா. ஒரு காலத்தில் இசையுலகத்தை கிரங்கடித்துக் கொண்டிருந்த டி.ராஜேந்தரிடம், கீ போர்டு ஆர்ட்டிஸ்டாக இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொல்ல தவறுவதேயில்லை டி.ஆரும்.

இந்த மன்மதன் பார்ட் 2 வை தயாரிக்கப் போவது டி.ஆர் என்றும், இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் இப்போதே கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ரஹ்மான் ஸ்டுடியோவுக்குள் டி.ஆர் நுழைஞ்சா எப்படியிருக்கும்?!

தயார்! தயார்!

அய்யய்யோ... அம்மா..!

தயார்! தயார்!

அய்யய்யோ... அப்பா!

ஜும் ஜும் ஜாக்...! ஜூசும் ஜூ ஜாக்...!

நல்லா இருக்குதே இந்த RR !

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!