மஞ்சப் பை ! சற்குணம் படத் தலைப்பு?


DNA315

மஞ்சப் பை ! சற்குணம் படத் தலைப்பு? Sargunam01
மஞ்சளை புனிதமாக நினைக்கும் இதே கோடம்பாக்கத்தில் தான் மஞ்சப் பையை கேவலாக நினைக்கும் வழக்கமும் இருக்கிறது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினாலொழிய அவர்களை சற்றே அருவருப்போடு பார்க்கிற வழக்கம் கால காலமாக இங்கு இருக்கிறது. மாப்ளே... அவன் சரியான மஞ்சப்பை'டா என்று சக நடிகர்களை முதுகுக்கு பின்னால் கேவலப்படுத்துகிற அலட்சியங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.

அப்படியும் ஜெயித்து ஆறடி உயர கட் அவுட்டில் சிரிக்கிற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள் பல நடிகர்களும் இயக்குனர்களும். இன்னமும் எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக் கொள்ளும் சினிமாக்காரர்கள் இங்கிருப்பது பலருக்கும் வேப்பங்காய் சமாச்சாரம். போகட்டும்... நாம் சொல்ல வருவது அதுவல்ல. இதுபோன்ற மஞ்சப் பை திறமைக்காரர்களை திருப்தி படுத்தவென்றே ஒரு செய்தி.

தனது படத்திற்கு மஞ்சப் பை என்று பெயர் வைக்க நினைத்திருக்கிறாராம் களவாணி சற்குணம். இப்படத்தில் சற்குணத்தின் ஆஸ்தான ஹீரோவான விமல்தான் நடிக்கப் போகிறார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!