நினைவுகள் சுகமானவை!


ANTHAPPAARVAI

நனைந்து போன காகிதத்தில்
கவிதை எழுத ஆசைப் பட்டேன்
நடக்கவில்லை !

கலைந்து போன கனவில்
உன் உருவத்தைத் தேடினேன்
கிடைக்கவில்லை !

கரைந்து போன மெழுகில்
திரி போட முயல்கிறேன்
முடியவில்லை !

விடிந்து விட்ட வானில்
நட்சத்திரங்களை
காண ஆசைப்பட்டேன்
தெரியவில்லை !

முடிந்து போன என் காதலில்
உன் நினைவுகளை
அசைபோட நினைத்தேன்....

ஆம்!
அவை மட்டும்
நாளுக்கு நாள் மெருகேறி
வளர்ந்து கொண்டே இருக்கின்றன....
நினைவுகள் சுகமானது!!


( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள். அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வியும் இன்பம் "காதலில் மட்டும்".)"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!