புதுமையை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்? -புதுசு கண்ணா புதுசு!


Go to page : 1, 2  Next

ANTHAPPAARVAI

"I can’t understand why people are frightened of new ideas. I’m frightened of the old ones"

-John Gage
புதுமை!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தேடுவதும், எதிர்பார்ப்பதும் புதுமையைத்தான்! அதே நேரத்தில் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் இந்தப் புதுமையைத்தான்.

ஆரம்ப காலம் முதலே மனிதன் புதுமையை ஏற்றுக்கொள்ள முன்வந்ததில்லை!
உலகம் அறிந்த ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமானால், விஞ்ஞானி கலீலியோவை சொல்லலாம். நான் பல கட்டுரை எழுதும் போதெல்லாம் உலக உருண்டையைப் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு. ஏனென்றால், ஒட்டுமொத்த உலக மக்களும் பூமி தட்டையானது என்று சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருந்த போது புதிதாக ஒருத்தர் பூமி தட்டையானதில்லை "உருண்டையானது" என்று சொன்னார். விளைவு? அவரைப் "பைத்தியம்" என்று சொல்லி கல்லாலேயே அடித்துக் கொன்றார்கள்!

மனிதன் காலம் காலமாக பிறர் சொல்வதையும், சொல்லி வைத்ததையுமே பின்பற்றி வாழ்கிறான். ஒருவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை மேலும் சிந்திக்கவிடாமல் கட்டிப்போடுமேயானால் அதுவரை அதுதான் நமக்கெல்லாம் வேதம்! ஆனால், யாராவது ஒருவர் முன்வந்து அதைப்பற்றி மேலும் சிந்திக்கத் தொடங்கினால் நமக்கு மேலும் புதிய சிந்தனைகளும், புதிய தகவல்களும் கிடைக்கும். (நான் சொல்வது புதிதாக சிந்திப்பதைப் பற்றி. யாரும் விதண்டாவாதத்தைக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! ஏனென்றால்? (புதிய சிந்தனை) வாதம் என்பது தனது திறமையை நிரூபிப்பது! விதண்டாவாதம் என்பது மற்றவர்களின் திறமையை நிராகரிப்பது!)

மனிதன் ஏன் புதுமையை உடனே ஏற்றுக்கொள்வதில்லை? ஏனென்றால் மனிதன் எப்போதுமே பிறர் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொள்ளவும், கடைபிடிக்கவும் நினைக்கின்றானே தவிர, தானாக எதையாவது சிந்திப்போம், உருவாக்குவோம் என்று முயற்சிப்பதே இல்லை. அதிலும் முக்கியமாக பலர் சேர்ந்து சொல்வதைத்தான் உடனே ஏற்றுக் கொள்கின்றான். அந்தப் பலர் என்பது பணம் படைத்தவர்களையும், பதவியில் இருப்பவர்களையுமே குறிக்கும். அதனால் தான் "ஏழை சொல் அம்பலம் ஏறாது" என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

புதுமை என்பது, யாரோ ஒருவரால் கண்டுபிடிக்கப்படுவது அல்லது உருவாக்கப்படுவது. அதனால்தான் புதுமையை உடனே யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதிலும் குறிப்பாக புதுமை என்பது, யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கும். அல்லது ஏதாவது ஒன்றை முறியடிப்பதாக இருக்கும்! அதாவது யாருக்கும் தெரியாததாக இருந்தால் அதை நாளடைவில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால், ஏதாவது ஒன்றை முறிடியடிப்பதாக இருந்தால் அதனால் லாபம் அடைபவர்கள் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றே முயற்சிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் உலகம் தட்டையானது என்று சொல்லி தாங்கள் தான் விஞ்சானிகள் என்று லாபம் அடைந்தவர்கள் மத்தியில் உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோவை பைத்தியமாக்கினார்கள்!!

ஒரு மனிதன் ஒன்றின் தரத்தை குறைத்து மதிப்பிடுகிறான் என்றால், அவன் அதனால் லாபம் அடைகிறான் என்பது பொருள். உதாரணமாக தங்கமும் பித்தளையும் பழகியவர்களுக்கு பார்த்தவுடன் தெரிந்துவிடும். கவரிங் வேண்டுமானால் தங்கத்தைப் போல இருக்கலாம் ஆனால் தங்கம் ஒருநாளும் கவரிங்கைப் போல இருக்காது. ஆனால், கவரிங் நகைகளை யாரும் உரசிப் பார்ப்பதில்லை. தங்கத்தைத்தான் உரசிப் பார்ப்பார்கள். ஏனென்றால்? அதன் மூலம் அவன் கொஞ்சம் சுரண்டிக் கொள்கிறான். மேலும் முதல் நாள் வாங்கிய தங்க நகையை மறு நாளே கொண்டு விற்கப் போனால் அதை பழைய நகையாகத்தான் மதிப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் மூலம் அவர்கள் லாபம் அடைய முயற்சிக்கிறார்கள்! So, லாபம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே சிலர் புதுமையை ஏற்றுக்கொள்ள விடாமல் சூழ்ச்சியும் செய்கிறார்கள்!

இனிமேல் தான் இந்தக் கட்டுரையின் சாராம்சத்திற்குள் நுழையப் போகிறேன்....

சினிமா!

சினிமாவில் பலரும் பல புதிய முயற்சிகளையும்(!), பல புதிய கோட்பாடுகளையும்(?) புகுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு மிகப் பெரிய புதுமை ஒன்றை சினிமாத்துறையை சார்ந்த சிலர் ஒன்று கூடித் தடுத்து வருகின்றனர்!

ஆம், எனது (தகாதவன்) டிஜிட்டல் கதாநாயகியைப் போல, பல புதுமையான வசதிகளுடன் களம் இறங்கியிருக்கின்ற "டிஜிட்டல் கேமராவை" பலரும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் அந்தப் புதுமை!

இதற்கு சாதாரண காரணம்? யாருக்கும் அந்தக் கேமராவை பயன்படுத்தத் தெரியாததுதான்! எனக்குத் தெரிந்தவரையில், விண்டோஸ் XP ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யக்கூடாது என்று என்னிடம் சண்டை போட்டவர்களும் உண்டு! (பேசிக்கலி நான் ஒரு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் & சர்வீஸ் இஞ்சினியர். அதாவது இணையதளத்துல இருக்குற கணினித்தகவல்களை எல்லாம் படிச்சுட்டு கருத்து பேசுறவன் இல்லை. ஒரு கம்ப்யூட்டரை என்கிட்டே குடுத்தீங்கன்னா, அந்த மவுசுக்குள்ள புகுந்து மானிட்டர் வழியா வெளியில வந்துடுவேன்!) சரி.. சரி.... விளம்பரம் பன்னல!

ஏன் XP வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால் விண்டோஸ் 98 மற்றும் 2000 இரண்டிலும் பழகிப் போனவர்களுக்கு Win-XP திரையையும் போல்டர்களையும் பார்க்கும் போதே பயம் வருகிறதாம்! பிறகு ஒரு நாள் சொல்லிக்கொடுத்த பிறகு "ரெண்டும் ஒன்னாத்தான் இருக்கு... கொஞ்சம் வித்தியாசம் ஹி... ஹி... ஹி..." என்று சொன்னவர்களும் உண்டு. இன்னைக்கு, விண்டோஸ் 9 எப்ப வெளிவரும்னு கேக்குற அளவுக்கு பல பேரை மாத்தியிருக்கேன்!!

அதே போல இன்று, மிகவும் அதிநவீன வசதிகளுடன் களம் இறங்கி இருக்கின்ற டிஜிட்டல் கேமராவையும் பல காரணங்கள் கூறி தடுத்து வருகின்றனர்! அதில் வேடிக்கையான ஒன்று "டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்தால் அது ஓடாது!" என்பதுதான்.

"இந்த மாதரி அறிவிளிகளை எல்லாம் என்னதான் செய்வது?" -என்று யாரோ தூரத்திலிருந்து கேட்கும் ஒரு குரல்(Mind Voice) எனக்குக் கேட்கிறது! அந்தக் குரலுக்கு நான் பதில் சொன்னால் பல சினிமாக்காரர்களுக்கு நான் எதிரியாக்கிப் போவேன்! ஆனாலும் என்ன செய்வது அநியாயத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் என்னால் அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது!

ஒரு அரசியல்வாதி தவறு செய்தால் நமது திரைப்படத்தில் நாம் அதை சுட்டிக் காட்டுகிறோம்! ஒரு காவல் துறை அதிகாரி தவறு செய்தால் அதையும் நாம் சுட்டிக்காட்டுகிறோம். அப்படியிருக்கும் போது சினிமாத்துறையில் நடக்கும் அநியாயங்களையும் நாம் சுட்டிக் காட்டத்தானே வேண்டும்?

இதோ தூரத்தில் இருந்து கேட்கும் அந்தக் குரலுக்கான எனது பதில்.

"டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்தால் ஓடாது" என்று சொல்வது அவர்களின் அறியாத்தனம் இல்லை. அது சூழ்ச்சி! அதாவது டிஜிட்டல் கேமராவில் சினிமாத் தயாரிக்கும் போது பலருக்கு கிடைக்க வேண்டிய "கமிஷன்" கிடைக்காமல் போகிறது! அதனால் தான் அவர்கள் டிஜிட்டல் கேமரா மீது வாஸ்த்து சோதிடம் எல்லாம் கூறுகிறார்கள்!

எப்படி என்றால்? சாதாரணமாக ஒரு திரைப்படம் தயாரிக்க 100 முதல் 120 பிலிம் கேன்கள்(ரோல்கள்) தேவைப்படுகிறது. ஒரு கேன் என்றால் 400 அடிகளில் இருந்து தொடங்கும். ஒரு கேனின் விலை 13,000 அல்லது 14,000 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த கேனின் விலையில்தான் பலருக்குக் கமிஷன் கிடைக்கிறது. உதாரணமாக ஒரு கேனுக்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் நூறு கேனுக்கு எவ்வளவு கிடைக்கும்?...

ஆனால், டிஜிட்டல் கேமராவில் படம் தயாரிக்கும் போது இந்தக் கமிஷனுக்கே வேலை இல்லாமல் போகிறதா? அதனால் தான் எல்லோரும் பதறிப்போய் வாஸ்த்து சொல்கிறார்கள். சினிமாக்காரங்களுக்குத்தான் சென்டிமென்ட் ரொம்ப ஜாஸ்தியாச்சே... அதனால இந்த வாஸ்துவைக் கேட்டதும் டிஜிட்டல் கேமரா பக்கம் யாருமே போகப் பயப்படுறாங்க.

அதுக்காகவே ஓடாத கதையை லோ பட்ஜெட்டுல டிஜிட்டல் கேமராவுல சினிமாவா எடுத்துட்டு அது ஓடாததுக்குக் காரணம் இந்த டிஜிட்டல் மேமராதான் அப்படின்னு முத்திரை குத்தி ஓரமாப் போட்டுட்டாங்க. ஆனா, ஹாலிவுட் படம் எல்லாம் இந்த டகால்டி(Digital) கேமரால தான் எடுக்குராங்கங்கறது நாம எல்லாருக்கம் பத்திரிகை அடிச்சு பந்தி வச்சு சொல்லணும்!

அதுக்காக டிஜிட்டல்ல படம் பண்ணும் போது நிறைய பணம் மிச்சமாகும்னு யாரும் கற்பனை பண்ணிக்காதீங்க. பிலிம்ல பண்ணும் போது வேஸ்டாகுற பிலிமுக்கான பணம் மட்டும் தான் மிச்சம். ஆனது அதுவும் DI பண்ணும் போது சரியாப்போயிடும். அதாவது செலவு ஒண்ணுதான் ஆனா குவாலிட்டி, படம் பண்ணுறதுல இருக்குற சுதந்திரம், கேமராவைக் கையாள்கிற சௌகரியம் இப்படி நிறைய வசதிகள் இருக்கு. லென்சை கலட்டிட்டா அதுல போட்டோவும் எடுக்கலாம். போட்டோ கேமெரா மாதரி உள்ளங்கைக்குள்ள அடங்கிடும் அந்தக் கேமரா. பேசிக்கலி அது Still கேமராவேதான்!! பிலிம்ல படம் பண்ணும் போது "ஐயோ பிலிம் வேஸ்டாகிடுமேனு தயாரிப்பாளர் பயப்படனும். ஆனால் டிஜிட்டல்ல கண்ணா பின்னான்னு சூட் பண்ணலாம்!

நான் முன்னாடியே சொன்ன மாதரி புதுமைங்கறது, ஒன்னு யாருக்கும் தெரியாததா இருக்கும் இல்லன்னா எதையாவது முரியடிக்கிறதா இருக்கும். இந்த டிஜிட்டல் கேமரா கமிஷனை முறியடிக்கப் போகுதுங்கரத்தை பொறுத்திருந்து பாருங்க!! CANON 5D CEMARA அப்படின்னு Youtube-ல தேடிப்பாருங்க நண்பர்களே. அந்தக் கேமராவோட பயன் புரியும்!

இதல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு அந்தக் குரல் மறுபடியும் கேக்குது. அதாவது பேசிக்கலி நான் ஒரு எடிட்டர்!

So , நண்பர்களே... ஆத்திரப் படாமல் புதுமைக்கு வழிவிடுங்கள். சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அனால், சாதிப்பதற்கு புதுமைதான் கை கொடுக்கும்!!

"I can’t understand why people are frightened of new ideas. I’m frightened of the old ones"

Cool Baby!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

ம்ம்... அருமை! ஆனால், இப்படியெல்லாம் பேசுவது நியாயமா? Smile
உங்கள் படத்தை யாரும் வாங்க மாட்டார்கள்...To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

எது தான் நியாயமா நடக்கிறது? உங்களை அட்மினாக நியமிச்சது மட்டும் நியாயமா? Smile Very Happy
என் படத்தை யாரும் வாங்கலைன்னா யூ டியூப்ல வெளியிடுவேன்... நான் சம்பாதிக்கிறதுக்காக படம் பண்ண ஆசைப்படல. எனக்கு சம்பாதிக்கிறதுக்கு எத்தனையோ வேலை தெரியும். சும்மா போற போக்குல நாலு கம்பியூட்டர் சர்வீஸ் பண்ணினேன்னா ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதிச்சுடுவேன். அதுக்கும் மேல இருக்குறதே இருக்கு வீடியோ கவரேஜ். 4 ஈவண்ட் பண்ணா போதும். அட, ஈவண்ட் கூட வேண்டாம் வெறும் கல்யாண கவரேஜ் போதுமே..."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

ANTHAPPAARVAI wrote:எது தான் நியாயமா நடக்கிறது? உங்களை அட்மினாக நியமிச்சது மட்டும் நியாயமா?  Smile  Very Happy
என் படத்தை யாரும் வாங்கலைன்னா யூ டியூப்ல வெளியிடுவேன்... நான் சம்பாதிக்கிறதுக்காக படம் பண்ண ஆசைப்படல. எனக்கு சம்பாதிக்கிறதுக்கு எத்தனையோ வேலை தெரியும். சும்மா போற போக்குல நாலு கம்பியூட்டர் சர்வீஸ் பண்ணினேன்னா ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதிச்சுடுவேன். அதுக்கும் மேல இருக்குறதே இருக்கு வீடியோ கவரேஜ். 4 ஈவண்ட் பண்ணா போதும். அட, ஈவண்ட் கூட வேண்டாம் வெறும் கல்யாண கவரேஜ் போதுமே...
நல்லாத்தானே இருந்தீங்க. என்ன திடீர்னு சினிமாக்காரங்க பக்கம் திரும்பிடீங்க? நான் உங்களுக்காக எத்தனை பேருகிட்ட ரெக்கமெண்ட் பண்ணியிருக்கேன் தெரியுமா? இனிமேல் நான் அவங்க மூஞ்சில எல்லாம் எப்படி முழிக்கிறது? நீங்க நல்லவரா இல்ல நிஜமாவே தகாதவரா? இப்படி பேசுறதை இங்கயோட நிருத்திகாங்க. இதையெல்லாம் சினிமாவா எடுத்தீங்கன்னா உங்க படத்தை யாரும் வாங்க மாட்டாங்க. அப்பறம் புதுசா தியேட்டர் கட்டிதான் ஓட்டனும். சொல்லிட்டேன். வெளியில சினிமா பத்தி நல்லா பேசிட்டு உள்ளுக்குள்ள இப்படி ஒரு எண்ணம் இருக்கா உங்களுக்கு. தப்புங்க. இது ரொம்ப தப்பு.

யூ டியூப்ல வெளியிடுவேன்னு சொல்றது வாதத்திறமைக்கு ஒத்துவரும். ஆனா, நடைமுறைக்கு ஒத்துவராது. ஏன்னா யூடியூப்னா என்னன்னே தெரியாத எத்தனையோ கிராமங்கள் இருக்கு. நீங்களும் விதண்டாவாதம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?

mind voice : சினிமா பண்ண முடியாம போனவுடனே மனுஷன் அப்படியே திரும்பிட்டாரு போல...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

Shakthi wrote:............................
யூ டியூப்ல வெளியிடுவேன்னு சொல்றது வாதத்திறமைக்கு ஒத்துவரும். ஆனா, நடைமுறைக்கு ஒத்துவராது. ஏன்னா யூடியூப்னா என்னன்னே தெரியாத எத்தனையோ கிராமங்கள் இருக்கு. நீங்களும் விதண்டாவாதம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?

mind voice : சினிமா பண்ண முடியாம போனவுடனே மனுஷன் அப்படியே திரும்பிட்டாரு போல...
என்ன பிரச்சினை உங்களுக்கு சக்தி? இது உண்மை இல்லைன்னு சொல்றீங்களா? அப்படின்னா டிஜிட்டல்ல எடுத்தா மட்டும் ஏன் அந்தப் படம் ஓடாது? கமல் ரஜினி படங்கள் கூட எத்தனையோ ஓடாமல் இருந்திருக்கிறது. அதெல்லாம் டிஜிட்டல்லையா எடுத்தாங்க? கதையும் சொல்ற விதமும் ரசிக்கிற மாதரி இருந்தா, மக்களுக்கு புடிச்ச மாதரி இருந்தா மொபைல எடுத்தா கூட மக்கள் ரசிப்பாங்க.

நாம பண்ணுற கல்யாண கவரேஜ் வீடியோவைக்கூட எத்தனை பேரு பாராட்டினாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? ஏன்னா அதை நாம சினிமா மாதரி எடிட் பண்ணி குடுக்குறோம். எல்லாரும் ஒரே மாதரியா கவரேஜ் பண்ணும் போது நாம அதை வேற மாதரி சூட் பண்ணி. தனியா அழைச்சுகிட்டு போயி நடக்க வச்சு, ஓட வச்சு, சிரிக்க வச்சி, சினிமா சாங் பண்ணுற மாதரி சூட் மாதரி பண்ணினோம். ஆரம்பத்துல(2001) நாம கூப்பிட்டப்போ, எத்தனை பேரு அதெல்லாம் வேண்டாம் எதுக்கு பில்டப்புன்னு சொன்னங்க? ஆனா இன்னைக்கு கல்யாண கவரேஜோட ஸ்டைலே எடிட் சாங் தானே?

சிவாஜி படத்துல ரஜினியை சிகப்பா காட்டுனாங்க. அதுக்கு என்னன்னவோ சாப்ட்வேரேல்லாம் யூஸ் பண்ணி, ஒரு பொண்ணை மாடலா நிக்க வச்சி பண்ணாங்க. ஆனா நான் வெறும் போட்டோசாப்-ல அதை 2004 லயே பண்ணிக் காட்டினேன். டெக்னிக் தான் முக்கியம் சக்தி. எதுல பன்னுரோம்ன்கறது முக்கியம் இல்ல. எதை எப்படிப் பன்னனும்னுங்கறது தான் முக்கியம்.

கமிஷனுக்காக ஒரு கண்டுபிடிப்பையே பயன்படுத்த விடாம ஜோசியம் சொல்லி எல்லாரையும் பயமுறுத்திகிட்டு இருக்காங்க. அதுக்கு நீங்க வக்காலத்து வாங்குறீங்களா?

யூ டியூப்ல வெளியிடுவேன்னு சொல்றது விதண்டா வாதம் இல்லை சக்தி. நான் நினைச்சதை எப்படியாவது சாதிச்சு காட்டிடுவேன். யூ டியூப் பத்தி மக்களுக்குத் தெரியலைன்னா. பாலசந்தர் டிவி யில ஒரு மணி நேர நாடகம் நடத்துவாருல்ல அதே மாதரி என்னோட படத்தை ரெண்டரை மணி நேர நாடகமா ஒட்டிக்காட்டுவேன். திருட்டு DVD யாவது நாட்டுல இல்லாம போகும்!! இல்லன்னா நானே DVD போட்டு வீட்டுக்கு வீடு கொண்டு போயி கொடுத்துட்டு வருவேன். சினிமா போற போக்குல ஒரு நாள் தியேட்டரெல்லாம் அரிசி அரைக்கிற மில்லாகவோ இல்லன்னா கல்யாண மண்டபமாகவோ தான் மாறப்போகுது. எங்க ஊருல ஒரு தியேட்டர் 2002 லயே அரிசி அரைக்கிற மில்லா ஆகிடுச்சு! நாம கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுத்தா இவங்க ஜாலியா பிளாக்குல டிக்கெட் போட்டு ஒரே நாள்ல சம்பாதிச்சுடுறாங்க.

ஆரம்பத்துல டிவி நாடகங்களைப் பத்தி எல்லா சினிமாக் காரங்களும் எவ்வளவோ தரக்குரைவாதான் பேசினாங்க. ஆனா, இன்னைக்கு எல்லா சினிமாக்காரங்களும் டிவி நாடகத்துலயும், கேம் ஷோவிலேயும் தான் வாழ்ந்துகிட்டு இருக்குறாங்க. அதே மாதரி நான் டிவியில சினிமா காட்டிட்டுப் போறேன்.

தகாதவன் போஸ்டர் விளம்பரத்துல "SMS இல் கதை சொல்லுவான் MMS இல் படம் காட்டுவான்" -னு Description எழுதியிருப்பேன்.(?) அதே மாதரி MMS ல கூட நான் படத்தை வெளியிடுவேன்...
எவ்வளவு நாளைக்குதான் வாடைகை வீட்டுலையே குடும்பம் நடத்துறது? நாமளும் சொந்த வீடு வாங்க வேண்டாமா?... "தகாதவன்" கதை ஏதோ சும்மா விளையாட்டுன்னு யாரும் நினைக்காதீங்க. அதுக்குள்ளே ஒரு புதிய சகாப்தமே ஒளிஞ்சிருக்கு!


To a Brave heart Nothing is imposible!

புதுமையை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்? -புதுசு கண்ணா புதுசு! Thagaathavan-01

அப்பறம் என்ன சொன்னீங்க.... சினிமா பண்ண முடியலேன்னு நான் ஆத்திரத்துல இப்படி பேசுறேனா?
நான் சினிமா பண்ண லேட் ஆகும்னு எனக்குத் தெரியும் சக்தி. அதுக்காகத்தான் "தகாதவன்" டைட்டிலை பப்ளிஷ் பண்ணினேன். இல்லைன்னா இந்நேரம் யாருகிட்டயாவது நான் சண்டை போட்டுக்கிட்டு நிக்கணும். இனிமே நான் டைட்டில ரேநியுவல் பண்ணலைன்னா கூட அந்த டைட்டிலை யாரும் படம் பண்ண முடியாது. ஏன்னா தகாதவன்னா நான் தான்னு உலகத்துக்கே தெரியும்.

"விளம்பரம்" அப்படிங்கற தலைப்பில MA படிக்கும் போதே ஆராய்ச்சி கட்டுரை எழுதி முதல் மதிப்பெண் வாங்கினவன் நான். ஒரு விஷயத்தை எப்படி பூஸ்ட் பண்ணனும், எப்படி புஸ்ஸுன்னு பண்ணனும்னு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்! இதுல நடிக்கப் போறதுகூட நான் இல்லை. சும்மா சம்பிளுக்குத்தான் என்னோட போட்டோவை போட்டு வச்சிருக்கேன். நானெல்லாம் நடிச்சா யாரு பாக்குறது?

"நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே இருக்குறது" இந்த டையலாக் தகாதவனுக்கானது!
என்ன பண்ணுறது மிஸ் ஆகிடுச்சு!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

நான் அதுக்காக சொல்லவில்லை. இப்பவே இதையெல்லாம் பேசவேண்டுமா. ஒரு படம் முடித்த பிறகு பேசிக்கொள்ளலாமே. எங்குதான் கமிஷன் இல்லாமல் வேலை நடக்கிறது? நாம் வாங்கும் சம்பளம் கூட ஒரு வகையில் கமிஷன் தானே.  அப்படிப் பார்த்தால் நாம் சம்பளம் வாங்காமல் தான் வேலை செய்து கொடுக்க வேண்டும். படம் முடிந்ததும் கிடைக்கும் லாபத்தில் எந்த தயாரிப்பாளர் நம்மை போன்றோர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள்? எனவே டிஜிட்டல்ல படம் பண்ணி DI பண்ற செலவை யாராவது டெக்னீசியன் பயன்படுத்திக் கொள்ளட்டுமே. இதையெல்லாம் ஏன் பகிரங்கப்படுத்த வேண்டும்?

நம் தலையில் நாமே மண்ணை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். சினிமாவில் எல்லோருக்கும் ஒவ்வொரு வகையில் தொடர்பு இருக்கும். நாம் இவ்வாறெல்லாம் பேசினால் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாம் தயாரிக்கும் படத்தை வாங்க மாட்டோம் என்று சொல்வார்கள். கமிஷன் ஏஜெண்டுகள் இல்லாமல் சினிமா பண்ணுவது ரொம்ப கஷ்டம். அதுவும் நீங்க பேசுற ஆட்கள் தான் ரொம்ப முக்கியம். புரியும்னு நினைக்கிறேன். சினிமா தெரியாமத்தான் நீங்கள் விளம்பரம் செய்துகொண்டு திரிகிறீர்கள் என்று இப்பவே ஒருத்தன் சொல்லிக்கிட்டு திரியிறான். உங்கள் திறமை மீது பலருக்குப் பொறாமை இருக்கிறது. எனவே கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஒரு படம் வெளிவந்ததும் அதன் பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.

சினிமாவில் திறமையை விட சூட்சுமம்தான் முக்கியம். ஆமாசாமி போடாம சினிமாத்துறையில் வளம் வர முடியாது. திறமையாளர்களை அமுக்கவே எல்லோரும் முயற்ச்சிப்பார்கள். உங்கள் எழுத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அது சினிமாவைப் பற்றி பெருமையாகவும் நல்ல கருத்துக்களையும் ஒப்பிடுவதால் தான். ஆனால், சினிமா அண்டர்கிரவுண்ட் மேட்டர்களை விமர்சனம் செய்தால் எல்லோரும் எதிரியாகி விடுவார்கள். நாம படம் பண்ணும் போது யாரையுமே கமிஷன் அடிக்க விடாம எல்லாத்தையும் நாமலே செய்வோம். அனா அதுக்கு சங்கங்கள் ஒத்துக்குமான்னு தெரியல... Smile

சரி உங்களால ஏதாவது புரட்சி ஏற்பட்டு மாற்றம் வந்து எல்லாரும் உங்க டிஜிட்டல் கதாநாயகி மாதரி டிஜிட்டல்ல படம் பண்ணினா சந்தோசம்தான். தகாதவன் இன்டர்நெட் விளம்பரத்தோட நிக்கனுமா இல்லை தியேட்டருக்கு வரனுமான்னு நீங்கதான் முடிவு பண்ணனும். வேற என்ன சொல்றதுன்னு தெரியல... Shocked  Shocked

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

கோபமா? பதில் இல்லையே...

ANTHAPPAARVAI

கோபமெல்லாம் இல்லை சக்தி. இதன் பிறகு இதில் பேச ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்வது மாதரி ஒரு படம் பண்ணிட்டு அப்பறம் பேசுகிறேன்... அதுக்குள்ளே நீங்க புதுமையை ஏற்றுக் கொள்வதற்கு உங்களைத் தயார் படுத்திகோங்க. ஏன்னா அதுல நிறைய புது விசயங்களைத்தான் சொல்லப்போறேன். தகாதவன் இன்ட்ரொடக்சன் சாங்க்ல "நீதி மன்றத்தை நடுங்க வைப்பான், காவல் மன்றத்தைக் கலங்க வைப்பான்" அப்படின்னு ஒரு லைன் எழுதியிருப்பேன். அதைக் கேளுங்க தகாதவன் எந்த அளவுக்கு தகாதவன்னு புரியும்!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

Sekaran Mathan

இன்னைக்கு ரொம்ப நல்லா புரியுது. உங்கள் சிந்தனை எப்போதுமே உயர்ந்ததாகத்தான் இருக்கும். நீங்க டிவியில வெளியிடுவேன்னு சொன்னீங்க ஆனா, கமல் DTH ல வெளியிடப்போராறு. உலக நாயகனுக்கு சமமா யோசிச்சிருக்கீங்க பாராட்டுக்கள்.....

Gulzaar

தகாதவன் ஒரு பெரிய ஹீரோவுக்காக வெயிட் பன்னுதுன்னு எனக்கு தெரியும். உங்களின் உயர்ந்த சிந்தனைகளுக்கு பாராட்டுக்கள். நீங்கதான் சினிமா கதையை இண்டர்நெட்டுல தொடரா எழுதுவீங்கன்னு எங்களுக்குத் தெரியுமே... ஆரம்பத்துல இதைப் படிக்கும் போது நமக்கு ஏன் வந்புன்னு நினைச்சு போயிட்டேன். ஆனா அப்பவே எனக்கு உங்கள் கருத்து பிடிச்சிருந்தது. கமல் சாரே திணறிகிட்டு இருக்காரு நீங்க என்ன பண்ணப் போறீங்களோ... ஒருவேளை அவரு DTH ல வெளியிடளைன்னா நீங்க யூ டியூப்ல வெளியிடுவீங்கன்னு 100% நன்புறேன். நீங்க செஞ்சாலும் செய்வீங்க.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

Gulzaar

படத்தை யூ டியூப்ல வெளியிடுறதுக்கு முன்னாடி அந்த தாலாட்ட வருவாளாவை முடிச்சு வச்சிடுவீங்களா? இல்ல அந்த முடிவையும் யூ டியூப்லதான் பாத்து தெரிஞ்சிக்கனுமா? I love you
Doubt...

Makesh

இந்தக் கட்டுரையின் தாக்கம் தான் விஸ்வரூபமாக வெளி வந்திருக்கிறது என்பதற்கு கலீலியோ மேட்டரே சான்று. பாராட்டுக்கள்.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

Priya Dharsani

மதன்... இதைப் பற்றி பேஸ்புக்கில் எழுதிவிடாதீர்கள். நல்ல விஷயங்கள் ஏதாவது ஒரு விதத்தில் நடக்கட்டும். நாம் செய்வதைவிட அவர் மூலம் நடப்பதுதான் சிறப்பு!!

Sekaran Mathan

Priya Dharsani wrote:மதன்... இதைப் பற்றி பேஸ்புக்கில் எழுதிவிடாதீர்கள். நல்ல விஷயங்கள் ஏதாவது ஒரு விதத்தில் நடக்கட்டும். நாம் செய்வதைவிட அவர் மூலம் நடப்பதுதான் சிறப்பு!!

நீங்க ஏன் 'அம்மா' மாதரி எனக்கு அப்பப்ப ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்கீங்க? எங்க எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியாதா? தலையே சும்மா இருக்கும் போது இந்த வாலுங்க தொல்லை தாங்க முடியலைப்பா.
'அம்மா' சொன்னது என்னைப் பெத்த அம்மாவைப் பத்தி சொன்னேன். பெக்குரவங்களும் வளர்க்குரவங்களும் மட்டும் தான் அம்மா. மத்ததெல்லாம் சும்மா...

Priya Dharsani

Sekaran Mathan wrote:
Priya Dharsani wrote:மதன்... இதைப் பற்றி பேஸ்புக்கில் எழுதிவிடாதீர்கள். நல்ல விஷயங்கள் ஏதாவது ஒரு விதத்தில் நடக்கட்டும். நாம் செய்வதைவிட அவர் மூலம் நடப்பதுதான் சிறப்பு!!
நீங்க ஏன் 'அம்மா' மாதரி எனக்கு அப்பப்ப ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்கீங்க? எங்க எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியாதா? தலையே சும்மா இருக்கும் போது இந்த வாலுங்க தொல்லை தாங்க முடியலைப்பா.
'அம்மா' சொன்னது என்னைப் பெத்த அம்மாவைப் பத்தி சொன்னேன். பெக்குரவங்களும் வளர்க்குரவங்களும் மட்டும் தான் அம்மா. மத்ததெல்லாம் சும்மா...
நான் இங்க இல்லைன்னு நினச்சு பேசிரீன்களா மதன்?

Sekaran Mathan

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?.. நீங்க இங்க இல்லன்னா இதை உங்களால படிக்கவே முடியாதா? இல்ல அதுக்கப்புறம் நீங்க என்னை திட்ட மாட்டீங்களா?.. பயமுறுத்துரதுக்கு அளவே இல்லாம போச்சு....
உங்களாலத்தான் நான் பேஸ்புக் பக்கமே போகாம இருக்கேன். இனிமே இங்கயும் வர விடாம பண்ணிடாதீங்க.

Priya Dharsani

சரி உங்க இஷ்டம். இனிமேல் நான் உங்களை எதுமே சொல்லல. போதுமா?
நீங்க எல்லாம் இங்கிலீஷ்ல சொன்னாத்தான் கேப்பீங்கன்னா. அவரோட 'இங்கிலீச' நீங்க கண்டிப்பா கேக்கப் போறீஎங்க. இங்கிலீசுன்னா புரியும்னு நினைக்கிறேன்...

Sekaran Mathan

Priya Dharsani wrote:சரி உங்க இஷ்டம். இனிமேல் நான் உங்களை எதுமே சொல்லல. போதுமா?
பத்தாது! இங்கிலீசுல பேசுங்க அப்பத்தான் கேப்பேன். Mad

Priya Dharsani

Sekaran Mathan wrote:
Priya Dharsani wrote:சரி உங்க இஷ்டம். இனிமேல் நான் உங்களை எதுமே சொல்லல. போதுமா?
பத்தாது! இங்கிலீசுல பேசுங்க அப்பத்தான் கேப்பேன். Mad
நண்பன் மாதரியே நிறைய எதிரிங்க நடமாடுராங்கன்னு அவரு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாரு. அந்த லிஸ்ட்டுல நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க போலருக்கு.

Sekaran Mathan

Priya Dharsani wrote:
Sekaran Mathan wrote:
Priya Dharsani wrote:சரி உங்க இஷ்டம். இனிமேல் நான் உங்களை எதுமே சொல்லல. போதுமா?
பத்தாது! இங்கிலீசுல பேசுங்க அப்பத்தான் கேப்பேன். Mad
நண்பன் மாதரியே நிறைய எதிரிங்க நடமாடுராங்கன்னு அவரு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாரு. அந்த லிஸ்ட்டுல நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க போலருக்கு.
நான் அக்மார்க் நண்பன்! அவருக்குத் தெரியும் என்னைப் பத்தி.

Sekaran Mathan

நல்ல விசயங்களை எல்லாம் உடனே பப்ளிஷ் பண்ணனும். வெட்டிக்கதை பேசுறவன், காப்பியடிக்கிரவன் எல்லாம் அப்பப்ப பேஸ்புக், டிவிட்டர்ல அப்டேட் பண்ணி பார்வையாளர்களை வரவச்சிகிட்டு தளத்தை புரமோட் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. நீங்க என்னடான்னா யாரையுமே பாராட்டாதீங்கன்னு சொன்னா இந்தத் தளம் எதுக்கு? வேலை மெனக்கெட்டு ஏன் இப்படியெல்லாம் யோசிச்சு எழுதணும்?

Priya Dharsani

Sekaran Mathan wrote:நல்ல விசயங்களை எல்லாம் உடனே பப்ளிஷ் பண்ணனும். வெட்டிக்கதை பேசுறவன், காப்பியடிக்கிரவன் எல்லாம் அப்பப்ப பேஸ்புக், டிவிட்டர்ல அப்டேட் பண்ணி பார்வையாளர்களை வரவச்சிகிட்டு தளத்தை புரமோட் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. நீங்க என்னடான்னா யாரையுமே பாராட்டாதீங்கன்னு சொன்னா இந்தத் தளம் எதுக்கு? வேலை மெனக்கெட்டு ஏன் இப்படியெல்லாம் யோசிச்சு எழுதணும்?
பூவுக்கு சென்ட் அடிக்க நினைக்கிற முதல் ஆள் நீங்கதான் மதன்.

Sekaran Mathan

Priya Dharsani wrote:
Sekaran Mathan wrote:நல்ல விசயங்களை எல்லாம் உடனே பப்ளிஷ் பண்ணனும். வெட்டிக்கதை பேசுறவன், காப்பியடிக்கிரவன் எல்லாம் அப்பப்ப பேஸ்புக், டிவிட்டர்ல அப்டேட் பண்ணி பார்வையாளர்களை வரவச்சிகிட்டு தளத்தை புரமோட் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. நீங்க என்னடான்னா யாரையுமே பாராட்டாதீங்கன்னு சொன்னா இந்தத் தளம் எதுக்கு? வேலை மெனக்கெட்டு ஏன் இப்படியெல்லாம் யோசிச்சு எழுதணும்?
பூவுக்கு சென்ட் அடிக்க நினைக்கிற முதல் ஆள் நீங்கதான் மதன்.
பூவுன்னா தலையில வைக்கணும். சுருட்டி கைக்குள்ள வச்சா, அப்பறம் கைக்கும் சேர்த்து சென்ட் அடிக்கணும்!

Priya Dharsani

நீங்க என்ன அவரு மாதிரியே பேசுறீங்க?

Sekaran Mathan

Priya Dharsani wrote:நீங்க என்ன அவரு மாதிரியே பேசுறீங்க?
ஹா... ஹா... தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ!...

Go to page : 1, 2  Next

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!