இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


ANTHAPPAARVAI


கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறான்?

மனிதர்கள் துன்பம் வரும் போதெல்லாம் இப்படித்தான் புலம்புவார்கள். இதில் கடவுளை "அவன்" என்று குறிப்பிடுகிறான். அப்படி என்றால் இது கடவுளை அவமதிப்பதா?... கடவுளை மரியாதைக் குறைவாக குறிப்பிடுவது நியாயமா? என்றெல்லாம் பலர் கேட்பார்கள்.

ஆனால், அவன் என்று இறைவனை அழைப்பது மரியாதைக் குறைவாகக் கருதவேண்டும் என்பதற்காக இல்லை. அவன் என்பது "உயர்திணை ஆண்பால் ஒருமை படர்க்கை பெயர்சுட்டாகும்!" அதனால் தான் இறைவனை அவன் என்று அழைத்தனர் முன்னோர்கள். மேலும், "அவனி" என்றால் உலகம் என்று பொருள். இந்த உலகத்தைப் படைத்தவன் என்பதாலும் இறைவனை அவன் என்று அழைத்தனர்!

எழுத்துக்களையும், சொற்களையும் உருவாக்கியது நாம் இல்லை, நமது முன்னோர்கள்!!

-அந்தப்பார்வை."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!