நீயும், உனது நினைவுகளும்!


ANTHAPPAARVAI

நீயும், உனது நினைவுகளும்! Kamam10
அன்பே........!,
உன்னால் மட்டுமல்ல,
உலகத்தில் அனைவராலும்
வெளிப்படையாக சொல்லிக் கொள்ள முடியாத
ஓர் அற்புதமான உணர்வு - காமம்!

உள்ளத்தை மட்டுமே காதலிக்கிறேன் என்று
எல்லோரும் சொல்வதைப் போல்
போலித்தனமாக நான் நடிக்க மாட்டேன்,

ஆம்,
என் காதல்
காமத்தில் தான் தொடங்கியது!..

முதன் முதலில் உன்னைப் பார்த்த போது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.

உடல் அழகில் மயங்கி,
உதடுகளோடு பேசி,
உணர்வுகளோடு பழகிய பின்பு தான்
உன் உள்ளம் எனக்குப் புரிந்தது.

தொடக்கம் காமமாக இருந்தாலும்
என் காதல் அதோடு நின்று விடாது,
உள்ளத்தின் அடிக்குகை வரை சென்று
என் இதயம் தன் உணர்வுகளை
கடைசி மூச்சில்
நிறுத்தும் வரை
அதில் நிறைந்திருக்கப் போவது
நீயும்,
உனது நினைவுகளும் மட்டும் தான்."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!