மனசே ஒரு நிமிஷம்!


ANTHAPPAARVAI

உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு நிமிடம் மட்டுமே செலவிட்டு, இதைப் படித்துப் பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

"நரி முகத்தில் விழித்தால் லாபம்."

இந்தப் பழமொழியை(?) தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்....

அந்தக் காலத்தில், இதை கேட்டவுடனே உடனே "கண் மூடித்தனமாக" (ஆராயாமல்) நம்பிக் கொண்டு, நரி முகத்தில் விழித்தால் லாபம் கிடைக்கும் என்று பலரும் நரிகளைத் தேடிச் சென்று, ஆபத்தில் மாட்டிக் கொண்டார்களாம்.

இன்னும் பலர், நரியின் புகைப்படத்தை வாங்கி வந்து தங்களது வீட்டில் மாட்டி வைத்து, தினமும் எழுந்ததும் அந்த புகைப்படத்தில் விழித்துப் பார்த்தனர். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லையாம்... இன்னும் சிலரோ, நரியின் 'பல்லை' வாங்கி வந்து, தங்களது கழுத்தில் மணியாகக் கோர்த்துப் பார்த்தனர். அதிலும் பலன் கிடைக்க வில்லையாம்....

இறுதியாக கிடைத்த தகவல்: எல்லா நரி முகத்திலும் விழித்தால் லாபம் கிடைக்காது, 'குள்ளநரி' முகத்தில் விழித்தால் மட்டுமே பயன் கிடைக்கும் என்றும், அதுவும் எதேச்சையாக நேர்ந்தால் மட்டுமே அவ்வாறு நடக்கும் என்றும் சொல்லப் பட்டது. ஆனால் இறுதி முடிவிலும் ஏமாற்றமே மிஞ்சியது! எனவே இதெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று முன்னோர்கள் சொன்னதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்!

அப்படியானால், முன்னோர்கள் சொன்னது பொய்யாக இருக்குமோ? என்ற கேள்வியுடன் பலரும் குழம்பிப் போனார்கள். இதை யாரிடம் கேட்பது? சொன்னவர்கள் யாரும் இன்று இல்லையே... என்று தேடியபோது இந்த செய்திதான் கிடைத்தது.

சரி இதற்கு என்னதான் முடிவு?.... என்று ஒரு பெரிய அகல்வு ஆராய்ச்சியே நடத்தப் பட்டது! அதில் முடிவும் கிடைத்திருக்கிறது...

அதாவது, 'நரி' என்றால் "நெல் பயிர்" என்று ஒரு அர்த்தம் உண்டு (நன்றி. தமிழ் அகராதி). கிராமங்களில், கதிர் அறுவடை செய்யும் போது, அந்த நெற் கதிர்களை சிறு சிறு அடுக்குகளாக வரிசையாக வைத்திருப்பார்கள், அதை "அரி" என்று சொல்வார்கள். பிறகு அந்த அரிகளை எல்லாம் ஒன்று சேர்த்து கட்டுக்களாக கட்டி எடுத்துச்செல்வார்கள். 'நரி' என்பதுதான் 'அரி' என்று மாறியிருக்க வேண்டும். எனவே நாம் தினமும் காலையில் வயலுக்குச் சென்று நமது நெல் பயிரை பார்வையிட்டு வந்தால், அதில் ஏற்படும் குறைகளை (நீர் பாய்ச்சுதல், பூச்சி மருந்து அடித்தல், உரம் வைத்தல்) கண்டறிந்து சரி செய்யலாம், அவ்வாறு சரி செய்து கவனித்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்படியென்றால் நல்ல லாபம் தானே!

நரி முகத்தில் விழித்தல் என்பது, விவசாயத்தை பார்க்க வேண்டும் என்பதாகும். அதனால் தான் இந்தியப் பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்திருக்கிறது இந்த விவசாயம்!
நிலம் வைத்திருப்பவர்கள் "நரி முகத்தில்" விழித்துப் பாருங்கள். நிச்சயம் லாபம் கிடைக்கும்!! நிலம் இல்லாதவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுங்கள்!!

நகரங்களில் இருப்பவர்கள், செய்யும் தொழிலில் தினமும் முழு ஈடுபாட்டோடு செயல்படுங்கள்.

இதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!