முதல் காதல்! சொல்லிப் பாருங்கள்...


ANTHAPPAARVAI

காதல்!
அதுவும் முதல் காதல்!

அந்தக் காதலை வெளிப்படுத்தும் போது
நமது தவிப்பு இருக்கின்றதே…
அப்பப்பா !

காதலை சொல்ல வேண்டும் என்று
உள்ளம் நினைத்தாலும்
உதடுகள் சொல்ல மறுக்கும்…

வியர்வை முத்துக்களால்
முகம் நனைந்திருந்தாலும்,
நாக்கு வரண்டு போய் விடும்…

காதல் வளர்த்த கண்கள்
அப்போது தன் பார்வையைத்
தடை செய்து கொள்ளும்…

சொல்லி விட வேண்டும்
என்ற உந்துதலில்
வார்த்தைகள் தோன்றினாலும்,
அவை தொண்டைக்குள்ளே சிக்கிக் கொண்டு
“தகிட ததுமி” ஆடும்…

இதயம் இயல்புக்கு மீறி துடித்து
ஓவர் டைம் வாங்கும்…

இத்தனை இன்னல்களையும் தாண்டி
சொல்ல முற்படும் போது....
சொல்ல வந்த வார்த்தையே நமக்கு
மறந்து போய்விடும்!

சொல்லவும் முடியாமல்,
சொல்லாமல் இருக்கவும் முடியாமல்
மனசு கிடந்தது தவிக்குமே…
அந்த்தத் தவிப்பை
வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அந்த வேதனைக்காக
நாம் வாழும்
நாட்களை எல்லாம் அற்பணிக்கலாம்.

துடித்துக் கொண்டிருக்கும்
இதயத்தையே துடிக்க வைக்கும் சக்தி
காதலுக்கு மட்டுமே உண்டு!!

காதலை சொல்லிப் பாருங்கள்..!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!