ஓ வண்ணத்துப் பூச்சியே!
எத்தனை கற்பனைகளோடு சுற்றித் திரிந்தாயோ -பாவம்
யாரோ உன்னை சிதைத்து விட்டார்கள்.
இறந்துவிட்ட உன் இதயத்தை
என்னால் தொட்டுப் பார்க்க முடிகிறது…
இதோ
என் இதயத்தையும்,
உயிரையும் உனக்குத் தருகின்றேன்
நீ மீண்டும் உயிர் பெற்று வா..
இருவரும் கைகோர்த்து
இவ்வுலகத்தை
மீண்டும் ஒரு முறை வலம் வருவோம்…
ஏன் தயக்கம்?
ஓ, நான் கரிய நிறம் கொண்ட குயில் என்பதற்காகவா?
நிலவு கூட கரிய மேகங்களோடு இருக்கும் போது தான் அழகு.
நான் எப்போதும் நிறத்தை விரும்புவதில்லை
நிஜத்தைத்தான் எதிர்பார்கின்றேன்…
“அந்தப்பார்வை”
எத்தனை கற்பனைகளோடு சுற்றித் திரிந்தாயோ -பாவம்
யாரோ உன்னை சிதைத்து விட்டார்கள்.
இறந்துவிட்ட உன் இதயத்தை
என்னால் தொட்டுப் பார்க்க முடிகிறது…
இதோ
என் இதயத்தையும்,
உயிரையும் உனக்குத் தருகின்றேன்
நீ மீண்டும் உயிர் பெற்று வா..
இருவரும் கைகோர்த்து
இவ்வுலகத்தை
மீண்டும் ஒரு முறை வலம் வருவோம்…
ஏன் தயக்கம்?
ஓ, நான் கரிய நிறம் கொண்ட குயில் என்பதற்காகவா?
நிலவு கூட கரிய மேகங்களோடு இருக்கும் போது தான் அழகு.
நான் எப்போதும் நிறத்தை விரும்புவதில்லை
நிஜத்தைத்தான் எதிர்பார்கின்றேன்…
“அந்தப்பார்வை”