முன்னோர் சொன்னது!


ANTHAPPAARVAI

“பன்றியோடு சேர்கிற கன்றும் சாக்கடையில் புரளும்.”

என்று முன்னோர்கள் சொன்னார்கள். இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு கெட்டவர்களோடு நல்லவர்கள் சேரக்கூடாது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் சேர்ந்தால் அவர்களையும் கெட்டவர்களாகவே மதிப்பிட்டு விடுவார்கள். முன்னோர்கள் இதை மட்டும் சொல்லவில்லை….

ஒரு சிறு உதாரணக் கதை…

கீதன் தனது நண்பர்களோடு தெருவில் விளையாடிக் கொண்டு இருக்கின்றான். அப்போது அவனது அம்மா அழைக்கிறார்….

”கீதன்….! எங்கடா போனே…”

"அம்மா, இதோ இங்க விளையாடிக் கொண்டிருக்கிறேன்…”

"இங்க வா”

கீதன் தன் அம்மாவிடம் வருகிறான்…

”இத பாரு கீதன், அந்தப் பசங்கக் கூட சேரவேண்டாம்னு உன்கிட்ட சொன்னேன் இல்லை, அப்பறம் ஏன் போனே?”

"ஏன்-மா சேரவேண்டாம்-னு சொல்றீங்க?”

"அந்தப் பசங்க சரியா ஸ்கூலுக்கு போகமாட்டாங்க…, படிக்க மாட்டாங்க…. நீ அவங்களோட சேர்ந்தால் உனக்கும் அந்தப்புத்திதானே வரும்.அதனாலதான் அப்படி சொன்னேன்”

"இல்லம்மா, நான் அப்படி ஆகமாட்டேன்.”

அம்மா கோபப் பட்டாள்...

”அம்மாவையே எதிர்த்துப் பேசுறியா? “பன்றியோட சேர்கிற கன்றும் சாக்கடையில புரளும்”-னு பரியவங்க சும்மாவா சொன்னாங்க?{இந்த வார்த்தை பயன் படுத்தியதால் எச்சரிக்கப் படுகிறீர்கள்}ங்கா அம்மா சொல்லுறதை கேட்டு நடந்துக்கோ புரியுதா?”

"ஏம்மா ஆத்திரப் படுறீங்க… அம்மா, அதே பெரியவங்க தானே “பூவோடு சேர்கிற நாறும் மணக்கும்”-னு சொல்லிருக்காங்க?”

"இப்ப நீ என்ன சொல்ல வர்ரே?”

சிறுவன் பொறுமையாக விளக்கத் தொடங்கினான்…

”அம்மா, இப்போ பன்றியையும், கன்றையும் எடுத்துக்கிட்டா பன்றி விவரம் தெரிந்தது – கன்று ஒன்றும் தெரியாததுஅதனால் பன்றியைப் போல் கன்று நடந்து கொள்கிறது. அதே நேரத்தில் பூவையும், நாரையும் எடுத்துக்கிட்டா பூ வாசம் உள்ளது – நாறு என்பது வாசம் இல்லாதது அதனால் பூவோட வாசத்தை நாறு பெறுகிறது. இந்த உதாரணங்கள் எதை உணர்த்துகின்றன என்றால், எதற்கு பவர் அதிகமோ அதுவாகவே மற்றது மாறும். இப்போ, அந்தப் பசங்க என் கூட சேர்கிறதனால, அவங்களும் என்னை போல் நல்லா படிக்கலாம் இல்லையா? என்னா இங்க என க்கு தானே பவர் அதிகம்…அதனால பெரியவங்க சொல்லிட்டாங்கணு கண்மூடித்தனமா நம்புரதை விட்டுட்டு, என்ன சொல்லிறுக்காங்கணு புரிஞ்சிக்கிட்டா இந்தமாதரி குழப்பம் வராது…”

தனது மகனின் விளக்கத்தை கேட்ட தாய், பெருமையுடன் கட்டியணைத்துக் கொண்டார்.

முன்னோர்கள் சொன்னது ஒருபோதும் தவறாக இருந்ததில்லை. புரிந்து கொள்வதில் தான் தவறு நடக்கின்றது.

“அந்தப்பார்வை”"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!