தலைகீழாக எரியும் நெருப்பு


ANTHAPPAARVAI

தலைகீழாக எறியக்கூடிய விளக்கை கண்டுபிடிக்கப் போகிறேன் என்று 'தாமஸ் ஆல்வா எடிசன்' என்ற விஞ்சானி ஒருவர் அறிவித்தார். உடனே பலதரப்பட்ட மக்களும் அதை கேலி செய்து விமர்சித்தார்கள். ஏனென்றால், நெருப்பு ஒருபோதும் கீழ்நோக்கி எரியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால், எடிசன் சொல்வது முரண்பாடானது, முட்டாள்தனமானது என்று முடிவுக்கு வந்தனர்.

ஆனால், சில நாட்களில் சொன்னது போலவே தலைகீழாக எறியக்கூடிய விளக்கை எடிசன் உருவாக்கி நிரூபித்தார். அதுதான் நாம் தற்போது பயன்படுத்தும் மின்சார விளக்கு!

எடிசன் அவர்கள் மின்சாரத்தில் இயங்கக்கூடிய விளக்கை கண்டுபிடிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஏன் "தலைகீழாக எறியக்கூடிய விளக்கு" என்று சொல்லவேண்டும்? இதுதான் புத்திசாலிகளுக்குள் இருக்கக்கூடிய அறிவுக்கூர்மை என்பது. அதாவது, நெருப்பு என்பது ஒருபோதும் கீழ்நோக்கி எரியாது என்பது எடிசனுக்குத் தெரியும். அதேபோலவே விளக்கு என்று சொன்னதும் எல்லோரும் எண்ணையில் எரியும் சிம்னி விளக்கைப்பற்றித்தான் கருத்தில் கொள்வார்கள் என்பதையும் தீர்மானித்திருந்தார். அதனால்தான் மின்சார விளக்கு என்று சொல்லாமல் "தலைகீழாக எரியும் விளக்கு" என்று முரண்பாடாக அறிவித்தார். இது மற்றவர்களை முட்டாளாக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மற்றவர்களை சிந்திக்க விடக்கூடாது என்பதற்காக.

அதாவது ஒரே சிந்தனையுள்ள மனிதர்கள் இந்த பூமியில் அதிகம் இருக்கிறார்கள் என்பது எடிசன் போன்ற அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியாக்கூடிய ஒன்றாகும். எனவே, தனக்கு தோன்றிய 'மின்சாரத்தில் எரியும் விளக்கு' பற்றிய சிந்தனை வேறு யாருக்கும் தோன்றிவிடக்கூடாது என்பதற்காக மற்றவர்களையெல்லாம் மேலும் சிந்திக்கவிடாமல் தனது அறிவுத்திறத்தால் கட்டிப்போட வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் "தலைகீழாக எரியும் விளக்கு" என்ற முரண்பாடான ஒரு வாசகத்தைக் கையாளுகிறார் எடிசன். இல்லையென்றால் எடிசனுக்கு முன்பாக வேறு யாராவது அதை உருவாக்கிவிடக் கூடும்.

- அந்தப்பார்வை.
THE BEGINNING AGAIN...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!