கற்பனைக் காவியனே...


Anonymous

உங்களுடைய "என்னைத் தாலாட்ட வருவாளா?" என்ற கதையைப் படித்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. படித்தும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதற்காகவே உறுப்பினராகவும் பதிவு செய்தேன். ஆனால் என்னால் லாகின் செய்ய முடியவில்லை. என்னையும் மறந்து சில நேரங்களில் சிரித்தும், அழுதும் இருக்கிறேன். ஒவ்வொரு பகுதியையும் முடிக்கும் போதும் அடுத்தப் பகுதியைப் படிக்காமல் விட முடியவில்லை. சரியான சந்தர்ப்பங்களில் தொடரும் போட்டு அசத்தி ஆர்வத்தை தூண்டியுள்ளீர்கள். தொலைக்காட்சி சீரியல்காரர்கள் எல்லாம் தொடரும் போடுவது எப்படி? என்பதை உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். கதை சொன்ன விதம் அபாரம்.
மிகவும் பிரபலமான ஒரு கதை ஆசிரியர்தான் இவ்வாறு கதாப்பாத்திரமே கதை சொல்வது போல அமைத்திருப்பார். நீங்கள் அதையும் மிஞ்சிவிட்டீர்கள்.

காதல் கதையில் காதலர்கள் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பதுதானே கிளைமாக்ஸ். ஆனால், கதை தொடங்கி தங்கள் காதலை வெளிப்படுத்திய அதே வேளையில் அந்தக் காதலர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற ரகசியத்தை உடைத்து விட்டீர்களே என்று முதலில் நினைத்தேன். ஆனால், அதன் பிறகும் ஒவ்வொரு பகுதியிலும் ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய கதையமைக்கும் திறமை புரிகிறது.

திருமணம் வரையில் சென்றுவிட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் திருமணமும் நடந்துவிடப்போகிறது என்ற நிலையில் எதிர்பார்க்காத ஒரு கேரக்ட்டரை உள்ளே திணித்து என்னை அழ வைத்து விட்டீர்கள். எப்போது பிரியப் போகிறார்கள்? எப்படிப் பிரியப் போகிறார்கள்? என்பதே இப்போதைய ஆர்வமாக இருக்கிறது.
அடுத்தப் பகுதிக்கு ஆர்வமாக இருக்கிறது கற்பனைக் காதலரே... தொடரவும்.
இப்படிக்கு,
தாலாட்ட வந்திருக்கும்,
உங்கள் லதீபா.

Anonymous

பீச்சுக்குப் போனா அங்க இருக்குற சுண்டல் விக்கிற எல்லாரையும் ஆத்திரமா பாக்கத் தோணுதுங்க. அந்த சுண்டல்காரன் மட்டும் என் கையில கிடைச்சான். மவனே செத்தான் அவன். யாருன்னு மட்டும் சொல்லுங்க. அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்... I love you

Anonymous

மிகச்சிறந்த விமர்சனம்.Smile விமர்சனத்திற்குத் தகுதியான கதையமைப்பு.Smile 

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!