முரண்பாடு!


ANTHAPPAARVAI

முரண்பாடு! Muranbaadu-Anthappaarvai
ரு மக்கள் கூடும் சபையில் அமர்ந்திருக்கும் குள்ளமான ஒரு மனிதனைப் பார்த்து, அவனைப் பெருமைப் படுத்தும் விதமாக "நண்பரே, நீங்கள் நல்லா உயரமாகத் தான் இருக்கிறீர்கள். உங்களை விட உயரமானவர்கள் யாரும் இல்லை!" என்று பெருமையாகப் பேசினாலும் கூட, அந்த சபையில் அமர்ந்திருக்கும் அனைவரும் அந்தக் குள்ளமானவரைப் பார்த்து கேலியாகச் சிரிப்பார்கள். அதே நேரத்தில் தன்னை உயர்வாகப் பேசினாலும் அந்தக் குள்ளமான மனிதரும் ஆத்திரப் படுவார்!

ஆனால், அதே சபையில் உயரமான ஒரு மனிதரைப் பார்த்து, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் "நண்பரே நீங்கள் இன்னும் உயரமாக வளர வேண்டும்" என்றோ, அல்லது "என்ன நண்பரே நீங்கள் இவ்வளவு குள்ளமாக இருக்கிறீர்கள்?" என்றோ கூறினால் அந்த சபையில் அமர்ந்திருக்கும் மக்கள், சொல்பவரைத் தான் ஏளனமாக பார்த்து சிரிப்பார்கள்.

அதே நேரத்தில் தனது தரம் குறைவாக மதிக்கப் பட்டாலும், அந்த உயரமான மனிதன் கோபம் கொள்ள மாட்டான். மாறாக அவனுக்கும் சிரிப்புதான் வரும்! ஏனென்றால் உண்மையை யாராலும் மறைத்து விடவோ, குறைத்து விடவோ முடியாது. மக்கள் கூடும் சபையில் மக்களுக்கு தெரியும் யார் உயர்வானவர், யார் தாழ்வானவர் என்பது!

உண்மை அனைவருக்கும் படம் காட்டும்!!

"தண்ணீருக்கு, நெருப்பை அணைக்க மட்டும் தான் தெரியும்.
ஆனால் நெருப்புக்கு, எப்படி அந்த தண்ணீருக்கு சூடு வைப்பது என்பதும் தெரியும்!"

நாம் எப்போதும் நெருப்பைப் போலவே இருப்போம்!

"அந்தப்பார்வை""To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!