சோதிடம் 100% உண்மை. சவால்!


ANTHAPPAARVAI

சோதிடம் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக பலர் அரைத்துப் பார்க்கின்றனர். ஆனால் இன்று வரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக பலர் அரைத்துப் பார்க்கின்றனர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.! அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!

அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்) எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?...

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறு நாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.!!

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல்வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யென்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெரிந்த வாகனத்தை "லைசென்ஸ் எடுத்துதான் ஒட்டவேண்டும்" என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....

நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக் கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யென்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடன்னேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!! சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 5 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 15 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறு பிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு, 15ம் வருட இறுதியில் உங்கள் 5கோடியை, 10கோடியாக திருப்பித் தருகிறேன்!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: சோதிடம் என்பது ஆரம்பப் பாடம் அல்ல! எனவே இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல வருடங்கள் கண்டிப்பாக தேவை! இது வெறும் பேச்சு அல்ல! தகுதியும், துனிச்சலும் உள்ளவர்கள் சவாலுக்கு வரலாம். மற்ற நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், யாராவது துனிச்சலுடன் சவாலுக்கு வந்தால் தெரிவிக்கப் படும்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!