ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மலையாள படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்ததுடன் இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். சொந்தமாக இசை ஆல்பம் வெளியிட்டு அதில் பாடல்கள் பாடி நடித்திருக்கிறார். பல இயக்குனர்கள் அவரை தனது படத்தில் நடிக்க கேட்டும் மறுத்திருக்கிறார். இந்நிலையில் மலையாள படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.
இதுபற்றி மலையாள டைரக்டர் ஷஜுன் கரியால் அளித்துள்ள பேட்டியில், மல்லுவுட் நடிகர் பிஜு மேனனுடன் இணைந்து தயாரித்து படத்தை இயக்குகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றியவர்தான் இதில் ஹீரோ. இப்படத்தில் கவுரவ வேடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடிப்பாரா என்கிறார்கள். அதுபற்றி இவ்வளவு சீக்கிரம் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அந்த எண்ணம் எங்களுக்கு உள்ளது. கவுரவ வேடத்தில் நடிப்பது பற்றி அவரிடம் பேசி வருகிறோம். இன்னும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றிய தீபக் தேவ் இசை அமைக்கிறார். 5 நண்பர்கள் பற்றிய கதையான இதில் பிஜுமேனன், லால், சுரேஷ் கிருஷ்ணா, பி.சுகுமார், சுனில் பாபு நடிக்கின்றனர். காமெடியை மையமாக கொண்ட இப்படத்தின் கதை முழுவதும் 2 நாட்களில் நடந்து முடிவதுபோல் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது, என்று கூறியிருக்கிறார்.