
பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்த, "திரைக்கதை திலகம் பாக்யராஜ், சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் களம் இறங்குகிறார். இதற்காக, அருமையான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். "சினிமா நவீனமயமாகி விட்ட இந்த காலத்தில், உங்களோட பழைய பாணி எடுபடுமா? என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில்: ஏன் எடுபடாது. தற்போது தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், திரையுலகத்தையே திருப்பிப் போடுற மாதிரியோ, அசத்துற மாதிரியோ, யாரும் பெரிதாக, படம் எடுக்கவில்லை. தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு, கதை சொல்லும் திறமை வளரவில்லை. இப்போதைய சினிமா, செக்குமாடு போல தான், ஒரே மாதிரியா சுத்தி வருது. தமிழ் சினிமால என் இடம் அப்படியே தான் இருக்குது. நிச்சயம் மறுபடியும் ஜெயிப்பேன். இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.