
காமெடி - குணசித்திர வேடங்களில் வெளுத்து வாங்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். ரொம்பவும் ஆவேசக்காரர். சினேகமுடன் வந்து, கை குலுக்கும் ரசிகர்களிடத்தில், சிரிக்க, சிரிக்கப் பேசுவார். அதே வேளையில், "தோடா... தமாசு... என, கிண்டல், கேலி பேசுபவர்களைக் கண்டால், சீறிப்பாய்கிறார். "எங்களுக்குள்ள எவ்வளவோ கஷ்டமிருந்தாலும், அதையெல்லாம் ஓரம் கட்டிவெச்சுட்டு, ரசிகர்களை சந்தோஷப்படுத்தறோம். சில ரசிகர்களோ எங்களை சங்கடப் படுத்திடறாங்க; சூழ்நிலை புரியாம நடந்துக்கறாங்க. கேலி, கிண்டல் பண்றாங்க. அப்படிப்பட்டவங்களப் பாக்கும் போது, ஆத்திரம் பொத்துக்கிட்டு வருது. நடிகர் - நடிகைகளை யாராவது கிண்டல் செய்தால், அடிப்பேன்! என்கிறார் ஆவேசமாக!