ஆபாச படத்துக்கு டிரிபியூனல் அனுமதி


avatar

பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் கள்ளப்பருந்து. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தணிக்கை குழு படத்தைப் பார்த்து விட்டு இது படு ஆபாசமாக இருக்கிறது. இதை திரையிடவே அனுமதிக்க முடியாது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. மறு ஆய்வுகுழுவிடம் மனுபோட்டடார் தயாரிப்பாளர். மறு ஆய்வுகுழுவும் பார்த்துவிட்டு அலறி அடித்து இது சமூகத்துக்கு ஆகாத படம் குப்பை என்று சொல்லிவிட்டது, உடனே தயாரிப்பாளர் டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு போனார். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.

இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், ம-றுஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. "ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார். வெளியே விட்டால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார். மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்க இணங்க வைக்கிறார். கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர். அனைவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டெல்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!