அய்யய்யோ, கான்செப்டே அது தான்!...


ANTHAPPAARVAI

அய்யய்யோ, கான்செப்டே அது தான்!... 00
நேத்து ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன்...

நல்லா பாசத்தோட வரவேற்று உபசரிச்சாங்க. கொஞ்ச நேரத்துல திடீருன்னு ரெண்டு பெறும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க.

என்னன்னா, சாப்பாட்டுல உப்பு கம்மியா இருந்தது. அதனால முதல்ல கணவர் தான் பிரச்சினையை ஆரம்பிச்சார்!

கணவர்: "ஏண்டி, உன்னை தூக்கி குப்பையில போட்டுடவா?" என்றார்.

திடீருன்னு அவர் இப்படி கேட்டதும் எனக்கே சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது!

அவரது மனைவி பாவம் திருதிரு'ன்னு விழித்தார். நான் இருக்கிறேன் என்பதால் அவர் கொஞ்சம் நிதானித்திருக்க வேண்டும்...

அதன் பிறகு நடந்ததை கீழே படியுங்கள்.

கணவர்: "ஏண்டி, உன்னை தூக்கி குப்பையில போட்டுடவா?"

மனைவி: "ஏன் என்னாச்சுங்க?"

கணவர்: "ஒண்ணுமில்ல, உப்பில்லாத பண்டம் குப்பையிலே'ன்னு பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. அதான் கேட்டேன்"

மனைவி: "சரி இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நாளையிலேருந்து கரைக்டா உப்பு போட்டுடுறேன்"

கணவர்: "நீயும் 10 வருசமா இதையே தான் சொல்லிக்கிட்டு இருக்கே..."

மனைவி: "அண்ணா, உங்களுக்கு சரியா இருக்கா? (-என்னிடம் கேட்டார்)

நான்: "பரவாயில்லம்மா, நான் உப்பு போட்டுக்கறேன்."

கணவர்: "ஏய், வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி கேட்டா, அவங்க பரவாயில்லைன்னு தான் சொல்லுவாங்க. ஏன்னா, ஒரு நாள் தானே அப்படின்னு விட்டுடுவாங்க. தினமும் நீ பண்ணுற கொடுமை எனக்குத் தானே தெரியும்."

மனைவி: "ஆமா, உங்களோட குடும்பம் நடத்துறதுக்கு நான் எங்க அம்மா வீட்டுக்கே போயிடலாம். தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை பண்ணி கிட்டே இருக்கீங்க..."

கணவன்: "போக வேண்டியது தானே. இனியாவது ஒரு நல்ல உப்புப் போடத் தெரிஞ்ச பொண்ணாப் பாத்துக் கட்டிக்கிட்டு வாய்க்கு ருசியா சாப்பிடுவேன்."

மனைவி: ஆமா, என்னைத்தவிர வேற எந்தப் பொண்ணும் உங்களோட சகிச்சிகிட்டுக் குடும்பம் நடத்த முடியாது. அதைப் புரிஞ்சிக்கோங்க முதல்ல!"

கணவன்: "சரி நீ கெளம்பு... இன்னொரு பொண்ணு வந்து குடும்பம் நடத்துறாளா இல்லையான்னு பாத்துடலாம்..."

மனைவி: "வர்ற எந்தப் பொண்ணா இருந்தாலும் ஒரு மாசத்துக்கு மேல இருக்க மாட்டாள். அப்பறம் அடுத்த மாசம் இன்னொரு பொண்ணைத்தான் நீங்கத் தேடனும்..."

கணவன்: "அய்யய்யோ, கான்செப்டே அது தான்!... மாதம் ஒரு பொண்ணுன்னா வருசத்துக்கு 12 பொண்ணு!... நீ தான் பத்து வருசமா போக மாட்டேன்னு அடம் பிடிச்சிகிட்டு இருக்கே.... முதல்ல கெளம்பு!

மனைவி: "நீயெல்லாம் ஒரு மனுஷனா?"

கணவன்: "(என்னிடம்) பாஸ் உங்கள் சொந்தத்துல நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க. குறிப்பா உப்புப் போடத் தெரிஞ்சிருக்கணும்..."

நான்: "இருங்க நித்தியானந்தா கிட்ட கேட்டு சொல்லுறேன்"

கணவன்: ஏன் பாஸ், சூடு சொரனைக்கும் நித்தியானந்தாவுக்கும் என்ன சம்மந்தம்...

நான்: உங்க ரசனைக்கு அங்க தான் பொண்ணு கிடைக்கும்...

மனைவி: "இந்த சினிமாக்காரங்களோட சேர்ந்தப்பரம் தான் நீங்க இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டீங்க..."

நான்: "உங்க சண்டையில என்னை ஏம்மா இழுக்குறே?"

கணவன்: "இத பாருடி, நம்ம சண்டை நம்மோடயே போகட்டும், நீ நினைக்கிற சினிமாக்காரன் இவரு இல்லை. இவருகிட்ட வச்சிகிட்டா அப்பறம் நாள் கணக்கா உக்காந்து கருத்து சொல்ல ஆரம்பிச்சிடுவாரு. நீ பண்ணுற கொடுமையையாவது தாங்கிக்கலாம், ஆனா..."

avatar

ஐயய்யோ... உங்க கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு..!
நிறைய எழுதுங்க...

Priya Dharsani

ANTHAPPAARVAI wrote:


மனைவி: "வர்ற எந்தப் பொண்ணா இருந்தாலும் ஒரு மாசத்துக்கு மேல இருக்க மாட்டாள். அப்பறம் அடுத்த மாசம் இன்னொரு பொண்ணைத்தான் நீங்கத் தேடனும்..."

கணவன்: "அய்யய்யோ, கான்செப்டே அது தான்!... மாதம் ஒரு பொண்ணுன்னா வருசத்துக்கு 12 பொண்ணு!... நீ தான் பத்து வருசமா போக மாட்டேன்னு அடம் பிடிச்சிகிட்டு இருக்கே.... முதல்ல கெளம்பு!
நல்ல காமெடி... எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

அப்படின்னா, பொண்டாட்டிகிட்ட சண்டை போடுறவங்க எல்லாம் அடுத்த லெவலுக்கு ஆசைப்படுரவங்களா?

avatar

உங்க வீட்டுல எப்படி?
நீங்க தான் சண்டை போடுறதா கேள்விப்பட்டேன்...

Priya Dharsani

Admin wrote:உங்க வீட்டுல எப்படி?
நீங்க தான் சண்டை போடுறதா கேள்விப்பட்டேன்...

ஹலோ, நான் சின்ன பொண்ணு. இன்னும் எனக்கு கல்யாணமே ஆகல... ஜாக்கிரதை!

avatar

அதுக்கு ஏன் என்கூட சண்டைக்கு வரீங்க.

Priya Dharsani

ரொம்ப பேசினா ரிப்போர்ட் கொடுப்பேன்.

avatar

குடுங்க குடுங்க...

Priya Dharsani

பயம் இல்லையா...?

avatar

Priya Dharsani wrote:பயம் இல்லையா...?
அட்மினே நாங்கதான். உங்க ரிப்போர்ட் எனக்குதான் வரும்...

Priya Dharsani

அது வரட்டும், முதல்ல அந்த மதிப்பாய்வு குடுக்குறதை நிறுத்துங்க.

avatar

அய்யய்யோ இந்த மதிப்பாய்வு நான் குடுக்கலை. இது அந்தப்பார்வையோட பதிவு. அதனால இதுல ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு பதிப்பாய்வு தானாவே உங்களுக்குக் கிடைக்குது. வேணுமின்னா டெஸ்ட் பண்ணிக்கோங்க.

Priya Dharsani

அப்படியா? சரி... அழுகாதீங்க.

avatar

Priya Dharsani wrote:அப்படியா? சரி... அழுகாதீங்க.
இப்ப கான்செப்ட் புரிஞ்சிடுச்சா?

Priya Dharsani

Admin wrote:
Priya Dharsani wrote:அப்படியா? சரி... அழுகாதீங்க.
இப்ப கான்செப்ட் புரிஞ்சிடுச்சா?

புரியுது புரியுது நல்லாவே புரியுது!அய்யய்யோ, கான்செப்டே அது தான்!... 938275610

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!