சின்னச் சின்ன வரிகள்


Go to page : 1, 2  Next

ANTHAPPAARVAI

ஒவ்வொரு காதலனும் தன்னவளை
ஒரு அற்புத அழகியாகவே மொழி பெயர்க்கின்றான்!


LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI


துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தையே துடிக்க வைக்கும் சக்தி
காதலுக்கு மட்டுமே உண்டு!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI


"காதல் வாழ்வின் முன்னுரை மகிழ்ச்சியாயினும், முடிவுகள் என்றும் சோகமே.... "

(அந்த சோகத்தை இன்பமாக அனுபவிக்கத் தெரிந்தால் காதலிக்கலாம்)"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

"ஊரோடு ஒத்து வாழ்"

"ஒரு ஊர் நல்ல செயல்களுக்கு துணை போனால், அதை நீயும் ஒத்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும்"

"அதே ஊர் தீயவர்களுக்கு துணை போனால், நீ அவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழ வேண்டும்""To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

"பனை மரத்தின் அடியில் இருந்து பாலைக் குடித்தாலும், அது கள்ளு தான் என்று சொல்லும் உலகம் இது."

சொன்னால் என்ன? சொல்லட்டுமே...
அதனால் நமக்கு என்ன நடந்து விடப் போகிறது?

ஒரு பால் டப்பாவில், விஷத்தை ஊற்றி நாம் குடிப்போம்... பார்ப்பவர்கள் அதை பால் என்றுதானே சொல்வார்கள்... அப்படி சொன்னால் நாம் இறக்க மாட்டோமா?

அல்லது, பால்டாயில் டப்பாவை சுத்தம் செய்து, அதில் பாலை ஊற்றி குடிப்போம்... பார்ப்பவர்கள் விஷம் என்றே சொல்லட்டும் அதனால் நாம் இறந்து விடவாப் போகிறோம்?

நாம் என்ன செய்கின்றோமோ அதன் அடிப்படையிலேயே நமக்குப் பலன் கிடைக்கும். எனவே மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைக்காமல் உங்கள் விருப்பம் போல், மனசாட்சிக்கு மட்டும் பயந்து வாழப் பழகுங்கள்.

கடவுள் நம்மை படைத்தது வாழ்வதற்காகவே..."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

"உலகம் நிர்வாணமாகத் திரிகிறது என்பதற்காக நீயும் அப்படித் திரியாதே!

நீ பட்டம் படித்தது அதற்காக இல்லை!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

பொல்லாத உலகம் இது!

இளைஞனே!..
உன்னை ஊரை விட்டு துரத்தி விட்டு கை கூட்டி சிரித்தவர்கள், நீ வெற்றி பெற்று உயர்ந்து நிற்கும் போது.... "நாங்கள் அன்று ஊரை விட்டு துரத்த வில்லை என்றால், இவன் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது!" என்று உனது வெற்றியில் பங்கெடுக்க வருவார்கள்!

எச்சரிக்கையாய் இரு.!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI


உயர்ந்த செங்குத்தான மலையின் மேல் எளிதில் ஏறிவிட முடியாது!

அதே நேரத்தில், கஷ்டங்களைத் தாங்கி ஏறிவிட்டால்... எளிதில் இறங்கி விடவும் முடியாது!

நேர்மையான வழியில் முன்னேற வேண்டும் என்று நினைப்பது, உயர்ந்த செங்குத்தான மலையில் ஏறுவதற்குச் சமமாகும்!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.


நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.


"நாலடியார்". சினம் இன்மை_( 63 மற்றும் 64 )"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

இளைஞனே!...
நீ எப்போதும் நெருப்பைப் போல் இருக்கப் பழகிக் கொள்.

ஏனென்றால்? நெருப்பை யாராவது கீழே சாய்க்க முற்பட்டால், அவர்களின் கையையே சுட்டு விடும்.

ஏனென்றால்? நெருப்பின் குறிக்கோள், லட்சியம் எல்லாமே மேல் நோக்கி செல்வது தான்.

ஏனென்றால்? நெருப்பு ஒரு போதும் கீழ் நோக்கி எரியாது. எனவே நீயும் அவ்வாறே இரு.

ஏனென்றால்? அப்போது தான் உன் லட்சியத்தை நீ அடைய முடியும்.

ஏனென்றால்? நீ பிறந்தது சாதிப்பதற்காக.

ஏனென்றால்? இந்த உலகம் உன்னையும் எதிர் பார்த்துக் காத்திருக்கிறது.

ஏனென்றால்? இங்கே இருக்கும் கேள்விக் குறிகளையெல்லாம் நீ ஆச்சரியக் குறியாக்க வேண்டும்!

ஏனென்றால்? லட்சியத்தை அடையும் வழி நேர்மையாக இருக்க வேண்டும்!

ஏனென்றால்? செல்லும் பாதை நேர்மையாக இருந்தால் தான், லட்சியமும் நேர்மையாக இருக்கும்!

ஏனென்றால்? லட்சியம் என்பது நெருப்பைப் போன்றது. எனவே நீயும் நெருப்பைப் போல் இரு!!

ஏனென்றால்......."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

"பசியோடு வரும் ஒருவனுக்கு மீன் குழம்பு சாப்பாடு போடுவதை விட
அவனுக்குச் மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தால், அவனே சமைத்து சாப்பிட்டுக் கொள்வான்"


நியாயம் தான்! நல்லது தான்! பாராட்ட வேண்டிய கருத்து தான்.....

ஆனால், அவன் வந்திருப்பது பசியோடு! அவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டு, தூண்டில் வாங்கி, குளத்தைத் தேடி பீன் பிடிக்கும் வரை அவன் வாழ வேண்டுமே...

ஒருவேளை அவன் பசியால் இறந்து விட்டால்? அல்லது குளம் வற்றி விட்டால்?

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!!

எனவே, தற்காலிகமாக சாப்பாடு போடுவது தான் புத்திசாலி செய்யும் செயல்! அதுதான் மனிதாபிமானம்!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதை நீயே செய்!

இன்னொருவன் பின்னால் நின்றால், அது வீரமாகாது...
இதற்கு நீ புறமுதுகிட்டு ஓடியே விடலாம்!!

இந்த எண்ணம் அனைவருக்கும் வந்தால், செல்ல நினைக்கும் இலக்கை எல்லோரும் அடையலாம்!

துணை போக நினைத்தால்... பின்னால் தான் போக வேண்டும்!!

முன்னால் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தான் எதிரிக்குப் பயம் வரும்! ஒருவன் தானே என்றால் இலக்காரமே மிஞ்சும்!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI


நாம் ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் போது தான், இதுவரை நாம் அதைப் பற்றி எவ்வளவு தவறாக பேசியிருக்கின்றோம் என்பது புரியும்!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

சிறிய குடிசைக்குள் இரண்டு பொருளை வைத்தாலும் அது நிரம்பி விடும்.
ஆனால் மிகப் பெரிய மாளிகைக்குள் அதிகமான பொருளை வைத்தாலும் அது குறைவாகவே தெரியும்!

இது போல்,
ஏதாவது ஒன்றை மட்டும் கற்பவர்கள் அறிவாளிகளைப் போல காட்சியளிப்பார்கள்! ஆனால் பலவற்றைக் கற்பவர்கள் குறைவாகவே தெரிவார்கள்!

கற்ற பின் படைப்பது ஆற்றல்! கற்கும் போதே படைப்பது பேராற்றல்!!

மற்றவரை சிந்திக்கவோ, தேடவோ செய்வது அறிவு!

யாராவது சொல்ல மாட்டார்களா என்று நினைப்பது அறியாமை!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI


ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போதே முடிவு தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் அடி முட்டாள்!

ஆனால், கிளைமேக்ஸ் வரை முடிவு தெரிந்து விடாமல் அனைவரையும் பல வழிகளில் சிந்திக்க வைப்பவன் படைப்பாளன்!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI


"என்னோடு பழகிய எழுத்துக்கள் எந்த ரூபத்தில் வெளிவந்தாலும் அதை என்னால் கண்டு பிடிக்க முடியும்!"

ஏனென்றால் "எழுத்துக்களை வைத்து ஒருவருடைய குணாதிசயத்தை அறிய முடியும்" என்று சொல்கிறது மனோதத்துவம்!!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!""To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI


"எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ
அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதே மேல்!""To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

இன்றைய அரசியல் ஹைக்கூ:

எதை தீர்க்க முடியாதோ
அதைத் தாங்கித் தான் ஆகவேண்டும்!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

ஒன்றை முழுமையாக உருவாக்கு . அல்லது உருவம் தெரியாமல் அழித்து விடு!

அரைகுறையாக எதையும் விட்டு வைக்காதே. அரைகுறை என்பது அவமானத்தின் சின்னம்!

@nthappaarvai"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

ஒரு பெண் ஒரு ஆணிடம் தேவையில்லாமல் கடன் கேட்கிறாள் என்றால்,
அவள் "நான் எல்லாவற்றிற்கும் தயார்!" என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறாள் என்று அர்த்தம்!

@nthappaarvai."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI


உன்னை யாரும் எதிர்த்துப் பேசக் கூடாது என்று ஆசைப் பட்டால் விவாதங்களில் ஈடுபடாதே!

உனது முட்டாள் தனம் வெளியில் தெரியக் கூடாது என்று ஆசைப்பட்டால் சபையில் பேச வராதே!

@nthappaarvai."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

பேசத் தெரியாமல் இருப்பதற்கும், பேசக் கூடாது என்று இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

பேசத் தெரியாமல் இருப்பது ஊனம்! (அறியாமை)
பேசக் கூடாது என்றிருப்பது மௌனம்!

@nthappaarvai"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவது என்பது (நெல்) "பயிருக்கு" தண்ணீர் பாய்ச்சுவது போன்றதாகும்.

தண்ணீர் பாய்ச்சவில்லை என்றாலும் பயிர் கெட்டுவிடும். தண்ணீர் அதிகமாக போனாலும் கெட்டு விடும்!"To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
ANTHAPPAARVAI

நாம் எதை எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகின்றோமோ,
பின்பு அதையே நாம் தேடிச் செல்கின்றோம்!

நமக்கு எதெல்லாம் மறுக்கப் படுகிறதோ,
பின்பு அதெல்லாம் தானாகவே நமக்குக் கிடைக்கப் பெறும்!@nthappaarvai."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

Go to page : 1, 2  Next

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!