அஞ்சலி அஞ்சலி குஷ்பாஞ்சலி- கோடம்பாக்கத்தில் ஒரு லவ் ஜோடி


avatar

இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல காலேஜ் போகவேண்டிய வயசுல பொண்ணுங்கள வச்சிக்கிட்டு, அதே வயசுப்பொண்ணை இவ்வளவு தீவிரமா லவ் பண்றாரே. இது எங்கே போய் விடியப்போகுதோ’’ சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் எம்.ஜி.ஆர்’ பட யூனிட் மொத்தத்தின் பெருமூச்சு கலந்த கமெண்ட் இதுதான்.

‘மசாலா கஃபே’வில் நடித்தபோதே பற்றிக்கொண்ட அஞ்சலி-சுந்தர்.சி. யின் காதல் இப்போது யூனிட்டில் இருக்கிற யாரைப்பற்றியும் கவலைப்படாமல், பட்டுப்பாரம்பரியம் போல் தொட்டுத்தொடருகிறதாம்.

படப்பிடிப்புக்கு வரும்போதும், ஷூட்டிங் முடிந்து கிளம்பிச்செல்லும்போதும் ஒரே காரில் பயணம் செய்யும் இந்த காதல் ஜோடி, படப்பிடிப்பின் இடைவேளைகளில் லஞ்சைக்கூட ஒரே தட்டில்தான் சாப்பிடுகிறார்களாம். இவர்களுக்கு இடையூறாய் இருக்கக்கூடாதே என்பதற்காக அஞ்சலியின் மம்மி பெரும்பாலும் லொகேஷனுக்கு செல்லாமல் ஹோட்டலிலேயே தங்கி, சேனல்களில் மூழ்கி விடுகிறார்.

வழக்கமாக சுந்தரின் லவ் ஸ்டோரிகளை, அது அடிக்கடி முற்றுப்பெற்றுவிடுவதால், கண்டுகொள்ளாமல் இருந்த குஷ்பூ, இந்த முறை இந்த ஜோடியின் நடவடிக்கைகளை கொஞ்சம் தீவிரமாகவே கண்காணிக்கச் சொல்லியிருக்கிறாராம். நோ டென்சன். தகவல் உண்மை என்று வந்தால் இனி சுந்தரின் எந்தப்படத்திலும் அஞ்சலி இடம் பெறாமல் பார்த்துக்கொள்வது என்பது மட்டுமே குஷ்பூவின் ஸ்மால் திட்டம்.

இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத சுந்தரோ, ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு, தான் அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கவிருக்கும் படத்துக்கும் நாயகியாக அஞ்சலியையே சிபாரிசு செய்திருக்கிறாராம்.

அஞ்சலி, அஞ்சலி குஷ்பாஞ்சலி.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!