
சென்னை: தாம்பரத்தில் நேற்று பேருந்து இருக்கையின் அடியில் இருந்த, ஓட்டையின் வழியே தவறி விழுந்து இறந்த சிறுமி ஸ்ருதியின் குடும்பத்திற்கு, ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமி உயிரிழக்க காரணமானோர் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பழுதான பேருந்தை இயக்க காரணமானோர் மீது கல்வித்துறை, மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.