சென்னை முடிச்சூரில் பேருந்து தீ வைத்து எரிப்பு!


ANTHAPPAARVAI

சென்னை: தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூரில் சீயான் மெட்ரிகுலேசன் பள்ளிப் பேருந்து ஒன்றை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்!

இன்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் இருந்து ஒரு மாணவி தவறி விழுந்திருக்கிறாள். இதை அறிந்த உடன் இருந்த மாணவர்கள் சத்தம் போட்டு கத்தியும், ஓட்டுனர் அதை பொருட்படுத்தாமல், நிறுத்தாமல் சென்றிருக்கிறார். பேருந்தில் முழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே சென்றதனால் பொதுமக்கள் என்ன என்று தெரியாமல் குழம்பியிருக்கின்றனர்.

பேருந்திற்கு பின்னால் வந்தவர்கள் சம்பவத்தை அறிந்ததனால், இரு சக்கர வாகனத்தில் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தி விசாரித்ததில் "அந்தக் குழந்தை எங்கள் பேருந்தில் இருந்து விழுந்ததில்லை!" என்று ஓட்டுனர் பொறுப்பில்லாமல் பதிலளித்ததும் பொது மக்களுக்கு ஆத்திரம் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பேருந்தின் இருக்கை அருகில் ஓட்டை இருப்பதை அறிந்த பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். சிறுவர்களை ஏற்றி செல்லும் பேருந்தில் இத்தகைய குறைபாடுகளை சரி செய்யாமல் ஓட்டலாமா? என்ற கருத்தைக் கொண்டு, கொந்தளிப்படைந்து பேருந்தில் இருந்து குழந்தைகளை இறக்கி விட்டு அந்தப் பள்ளிப் பேருந்தை மாலை 4.45 மணிக்கு "முடிச்சூர் அட்டைக்கம்பெனி" அருகில் தீவைத்துக் கொளுத்தினர்.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் தொடர்ந்து எறிந்த பிறகே தீயணைப்புப் படையினரால் அந்த தீ அணைக்கப் பட்டிருக்கிறது.

பேருந்தில் இருந்து கீழே விழுந்த சுருதி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

"15 நாட்களுக்கு முன்னர் FC செய்யப்பட்ட பேருந்தில் இந்தக் குறைபாட்டை கவனிக்காமல் இருந்தது ஏன்?"

"இத்தகைய குறைபாடுள்ள பேருந்திற்கு அனுமதி வழங்கியது எப்படி?"

என்பன போன்ற காரணங்களே பொது மக்களை தீவைக்கத் தூண்டியிருக்கிறது!

பள்ளி நிர்வாகமோ அந்தப் பேருந்து எங்கள் பள்ளிக்கு சொந்தமானதில்லை என்று முற்றிலும் மறுக்கின்றார்.!

இது பற்றி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோ காட்சிகள் பின்பு இணைக்கப் படும்.

ANTHAPPAARVAI

முடிச்சூர் பள்ளிப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி சுருதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று முடிச்சூர் பகுதியில் கடைகள் அடைப்பு!

பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

போக்குவரத்து அதிகாரிகள் மீது உயர்நீதி மன்றம் நேரடி நடவடிக்கை.

சீயோன் பள்ளி நிர்வாகத்தினர் கைது!

பள்ளிப்பேருந்து நடத்துவதின் விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தல்!

avatar

மிகவும் துயரமான சம்பவம்!...

avatar

25.07.2012 மாலை 5.01 மணிக்கு வெளியான இந்த செய்தி தமிழகத்திற்கே முதலாவதாக தகவல் சொன்னது!

சரியாக சொன்னால் பேருந்து எரிந்து கொண்டிருந்த நேரமும் இது தான்!!

ANTHAPPAARVAI

Shakthi wrote:25.07.2012 மாலை 5.01 மணிக்கு வெளியான இந்த செய்தி தமிழகத்திற்கே முதலாவதாக தகவல் சொன்னது!

சரியாக சொன்னால் பேருந்து எரிந்து கொண்டிருந்த நேரமும் இது தான்!!


ஆமாம் சக்தி!

நான் தான் இதை முதலில் வெளியிட்டேன். காரணம்? சம்பவம் நடந்தது என் வீட்டின் வாசலில்!!
பேருந்து எரியும் இடத்திற்கு மேலே மின் கம்பி சென்றதால் அப்போது மின்சாரத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தான் என்னால் தொடர்ந்து செய்தி வெளியிட முடியவில்லை.
பேருந்து எரிவதை ரெக்கார்டு செய்ய கேமெரா எடுக்க வீட்டிற்கு வந்த போது இதை பதிவு செய்தேன்.
பேருந்து எரிந்ததைத் தவிர மற்ற அனைத்து நிகழ்வுகளும் வீடியோ எடுத்தும் வைத்திருக்கிறேன். (ஸ்ருதியின் வீட்டிற்கு எதிரில் தான் எனது வீடும்!)

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!