போதையில் தமிழகம் : மது அடிமைகள் அதிகரிப்பு !


avatar

மதுரை: அரசு மருத்துவமனை, மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்படும், மது, போதை நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு, மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்கான சிறப்பு மையம் அரசு மருத்துவ மனைகளில் செயல்படுகிறது. இங்கு சமீபகாலமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் சராசரியாக ஒருநாளைக்கு 10 முதல் 20 நோயாளிகள் வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிப்பது, மனநல ஆலோசனை வழங்குவதென, டாக்டர்கள் குழுவாக செயல்படுகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மனைவிகள், அவர்களது குழந்தைகள் என... ஒட்டுமொத்த குடும்பமே, மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர்.

குறிப்பாக, கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம், பத்து கிராமங்களுக்கு ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. தற்போது, கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் பெருகியதால், குடிப்பவர்களின் எண்ணிக்கையும், இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, குடிப்பவர்களின் மனைவியும், குழந்தைகளும் தான். மற்ற நோய்களைப் பொறுத்தவரை, நோயாளிகள் டாக்டரிடம் மிகுந்த அனுசரணையுடன் நடந்து கொள்வர். குணமாக வேண்டும் என்பது தான், நோயாளிகளின் குறிக்கோளாக இருக்கும். போதைக்கு அடிமையானவர்களுக்கு ஊசி போட்டு, மருந்து கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். மதுப் பழக்கத்திலிருந்து மீளவேண்டும் என பெரும்பாலானோர் நினைப்பதில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வர். இவர்களை கையாள்வது, டாக்டர், நர்ஸ்களுக்கு சவாலான விஷயம்.

கல்வி கற்பிக்கும் பள்ளி நேரத்தை விட அதிகம்: இதற்கான தீர்வு குறித்து, டாக்டர்கள் கூறியதாவது: மதுக் கடைகளை அதிகம் திறந்தால், அரசுக்கு வருமானம் கிடைக்கலாம் தான். ஆனால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் என்பதையும் உணரவேண்டும். கல்வி கற்பிக்கும் பள்ளிகளே காலை 9 முதல் மாலை 4 மணி வரை தான் செயல்படுகின்றன. குடிமக்களை கெடுக்கும் மதுக் கடைகள் இரவு 10 மணி திறந்திருக்கின்றன. இந்த விற்பனை நேரத்தை குறைக்கலாம். பள்ளி, கல்லூரி, நெருக்கமான குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை, "பொது நலன் கருதி' மூடச் சொல்லலாம். மதுவின் விலையை உயர்த்தலாம், என்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!