சர்ச்சையை கிளப்பிய எய்ட்ஸ் மருந்து


avatar

எய்ட்ஸ் வராமல் தடுக்க, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட "த்ருவதா' என்ற புதிய மருந்து, சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.எய்ட்ஸ் நோய் தாக்கிய பிறகு, அதை முற்றிலும் சரி செய்ய இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பாதிப்பை குறைக்க ஏற்கனவே மருந்துகள் இருக்கின்றன. தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து, எச்.ஐ.வி., பரவாமல் 73 சதவீதம் தடுக்கும் என நம்பப்படுகிறது. இம்மருந்துக்கு எதிர்ப்பு குரலும் வலுக்கிறது. மருந்தையா எடர்க்கின்றனர் என நீங்கள் நினைக்கக் கூடும். அதற்கு வேறு காரணம் இருக்கிறது.

தகாத உடலுறவு மூலம் எச்.ஐ.வி., பரவி இருந்தாலும் இந்த மருந்தை, எய்ட்ஸ் நோயை தடுக்கும் என்பது தான் சர்ச்சைக்கு காரணம். இம்மருந்தால், அச்சம் நீங்கி, தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்து, சமூக {இந்த வார்த்தை பயன் படுத்தியதால் எச்சரிக்கப் படுகிறீர்கள்}க்கம் பாதிக்கப்படும் என்பது தான் காரணம். எய்ட்சால் பாதிக்கப்படாத நபர் தொடர்ச்சியாக, "த்ருவதா' மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கணவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மனைவி இந்த மருந்தை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

2010ல் நடந்த ஆய்வில், "த்ருவதா' மருந்து 44 சதவீதம் எச்.ஐ.வி., பரவுவதை தடுத்தது. தொடர் ஆராய்ச்சியால், தற்போது 73 சதவீதம் தடுக்கிறது. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே நோய் பரவாது என்கின்றனர்.பிரிட்டனில் "த்ருவதா' மருந்து எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எய்ட்ஸ் வராமல் தடுக்க பயன்படுத்துவதில்லை.சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, இம்மருந்து மீதான ஆராய்ச்சி இன்னமும் தொடர்கிறது.
சர்ச்சையை கிளப்பிய எய்ட்ஸ் மருந்து Tamil_News_large_512107

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!