"புதிய மென்பொருள் கண்டுபிடிப்பேன்!'


avatar

தன் 14 வயதில், 53, "ஆன்-லைன்' கம்ப்யூட்டர் தேர்வுகள் எழுதியுள்ள அவினாஷ்:
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே, என் வீட்டில் கம்ப்யூட்டர் உள்ளது. சிறு வயதிலிருந்தே, கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் வாங்கி கொடுக்க சொல்லி, படிக்க ஆரம்பித்தேன். பள்ளி நேரம் போக, மற்ற நேரம் எல்லாம், கம்ப்யூட்டர் தான் என் உலகம்.

என் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை, இதுவரை, "சர்வீஸ்' செய்ய, வெளியில் யாரிடமும் கொடுத்ததே இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், நானே சரி செய்து விடுவேன். கல்லூரி அளவில் நடக்கும் தேர்வுகளை, "ஆன்-லைனில்' எழுதலாம் என தெரிந்து, ஒவ்வொரு புத்தகமாகப் படித்து, தேர்வு எழுதினேன். "ஆன்-லைனில்' தேர்வு எழுதுவது கஷ்டமான விஷயம். நிறைய படிக்க வேண்டும்; எந்த மாதிரியான கேள்விகள் வரும் என, யூகிக்க முடியாது.இன்று இந்தியாவிலேயே, 14 வயதில், 53, "ஆன்-லைன்' கம்ப்யூட்டர் தேர்வுகள் எழுதிய ஒரே மாணவன் நான் தான். எனக்குச் சொந்தமாக, இரண்டு, "வெப்சைட்'களை உருவாக்கி இருக்கிறேன். அதைப் பார்த்து, பல பொறியியல் மாணவர்கள், என்னிடம் சந்தேகங்கள் கேட்கின்றனர்.

"ஆன்-லைனிலேயே' வகுப்பும் எடுப்பதன் மூலம், மாதம், 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அடுத்து, கம்ப்யூட்டரில் புதிய, "புரோகிராம்'களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். இப்போதும் கிராமப்புற மாணவர்கள், கம்ப்யூட்டரைப் பார்த்தாலே மிரள்கின்றனர். அவர்களும் கம்ப்யூட்டரை சுலபமாக பயன்படுத்த, புதிய மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டும்; விரைவில் அதை செய்வேன். கம்ப்யூட்டரின் பயன்பாடு, எல்லா ஊருக்கும், எல்லா மாணவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்; அது தான் என் கனவு.
"புதிய மென்பொருள் கண்டுபிடிப்பேன்!' Tamil_News_large_512005

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!