அஜீத் ரசிகர்கள் என்னை மிரட்டினர் -வில்லன் நடிகர் கே.கே.


avatar

அஜீத்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்தவர் கே.கே. ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் நடித்துள்ளார். கே.கே. அளித்த பேட்டி வருமாறு:-

பில்லா-2 படம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் அடையாளம் கண்டு பாராட்டுகிறார்கள். அஜீத் ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர். எங்கள் “தல”ய படத்தில் எப்படி அடிக்கலாம் என கேட்டனர்.

எனது வில்லன் கேரக்டர் வலுவாக பதிந்துள்ளதை அதன் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். பிறகு அஜீத் ரசிகர்கள் அமைதியாகி பாராட்டினர். “பில்லா-2” படப்பிடிப்பில் அஜீத்துக்கும் எனக்கும் சண்டை நடந்தபோது என் காலில் காயம் ஏற்பட்டது. அஜீத் பதறிபோய் காலில் வழிந்த ரத்ததை துடைத்து முதல்உதவி சிகிச்சை அளித்தார். பெரிய ஹீரோ இவ்வளவு எளிமையாக நடந்தது என்னை பரவசப்படுத்தியது. அவர் சிறந்த மனிதர்.

அஜீத்துடன் நடித்தது பெருமையாக உள்ளது. தற்போது மிங்கினின் மூகமுடி படத்தில் நடிக்கிறேன். அதிலும் எனக்கு பதிவான வேடம். நயன்தாரா, அசின் போன்றோரை தமிழ் திரையுலகம்தான் பெரிய நடிகைகள் ஆக்கியது. கோடம்பாக்கத்துக்கு பவர் இருக்கிறது. சினிமாவுக்கு இதுதான் கடவுள். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!