என்னை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா? -டாப்ஸி


avatar

மங்காத்தா படத்தில் நடித்த மகத்துக்கும் தெலுங்கு நடிகர் மனோஜுக்கும் இடையே சென்னையில் அடிதடி நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் சுற்றி நின்று உதைத்தனர். வயிறு, தொண்டையிலும் குத்தினார்கள். இதில் நிலை குலைந்த மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள். போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோஜை கைது செய்ய தேடினர். அவர் மலேசியாவுக்கு தப்பி விட்டார்.

தன்னை கைது செய்யாமல் இருக்க கோர்ட்டில் முன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்துள்ளார். தகராறு நடந்தபோது அருகில் இருந்த இதர நடிகர்-நடிகைகள் யார் என போலீசார் ரகசியமாக விவரம் திரட்டி வருகிறார்கள். அவர்களிடம் விசாரணையும் நடக்கிறது.

மனோஜ் தரப்பில் டாப்ஸி விவகாரத்தால் இந்த சண்டை மூண்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்கள். டாப்ஸியை, மகத் காதலித்ததாகவும் அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை காட்டி மிரட்டியதாகவும் இதுபற்றி மனோஜுக்கு தெரிய வந்ததால் தட்டிக் கேட்டதாகவும் கூறியுள்ளனர். அப்போது தான் அடிதடி ஏற்பட்டுள்ளது.

டாப்ஸி தற்போது மனோஜுடன் நெருக்க மாக உள்ளார். அவர் குடும்பத்தினர் தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்கிறார். இது மகத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதுவே மோதலுக்கு காரணமாக அமைந்தது என்றும் போலீசிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மகத் தன்னை காதலிப்பதாக வதந்தி பரபரப்புகிறார் என்று டாப்ஸி கண்டித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மகத், மனோஜ் இருவருடனும் என்னை இணைந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. மகத் யார் என்றே எனக்கு தெரியாது. மகத் என்னை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. அதில் துளியும் உண்மை இல்லை.

மகத்தை இதுவரை நான் சந்திக்கவே இல்லை. எனக்காக அவர்கள் சண்டை போட்டதாக கூறுவதை நம்ப முடிய வில்லை. தகராறு நடந்த போது நான் சென்னையில் இல்லை. கர்னூரில் இருந்தேன். எந்த தொடர்பும் இல்லாமல் இவர்களோடு என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது சங்கடமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!