நித்தியானந்தா – ரஞ்சிதாவை படம் பிடித்தது பற்றி கூறும் ஆர்த்தி ராவ் – அதிர்ச்சி உண்மைகள்


avatar

நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிகளை பதிவு செய்தேன் என்று அவரது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் போலீஸில் நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ராவ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நித்தியானந்தாவின்செக்ஸ் லீலைகள் தொடர்பாகவும், அவர் தன்னிடம் எப்படியெல்லாம் பாலியல் சித்திரவதைகளை செய்தார் என்பதையும் கூறியிருந்ததை நேற்று பார்த்தோம்.

இன்று நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகளை தான் எப்படி படமாக்கினேன் என்று ஆர்த்தி கூறியதை பார்க்கலாம்:

எனது பூர்வீகம் பெங்களூரு என்றாலும் பிறந்து வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தது எல்லாம் சென்னையில்தான். 1996-ல் பி.டெக். படித்து முடித்தேன். பின்னர் அமெரிக்காவில் எம்.டெக். படித்தேன். காதலித்து பெற்றோர் விருப்பத்துடன் கிடைத்ததற்கரிய அன்பான கணவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கை தொடங்கினேன். நல்ல வேலை, மாதம் ரூ.2 லட்சம் சம்பளம். எல்லாம் இருந்தும் ஆன்மீக தேடல் என்னிடம் அதிகமாக எழுந்தது. அதற்காக நித்தியானந்தாவின் போதனைகளை நம்பி அவரது ஆசிரமத்துக்கு செல்ல தொடங்கினேன்.

எனது கணவர் ஏழைகளுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக நிற்பார். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் கிடையாது. அவரது எச்சரிக்கையையும் மீறித்தான் நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சென்று வந்தேன். ஆசிரமத்துக்குள் போய்விட்டால் நித்தியானந்தா சொல்வது மட்டும்தான் சரி. அவரை பரிபூரணமாக நாம் நம்ப வேண்டும் என்பதுதான் அங்கு தரப்படும் பயிற்சி.

உலகில் மிகப்பெரிய பாவம் குரு துரோகம் என்பார். அந்த மிரட்டலுக்கு பயந்துதான் எல்லோரும் ஏமாந்து போகிறார்கள். நான் எனது வேலையை உதறி தள்ளிவிட்டு ஆசிரமத்தில் தங்கினேன். அவருடைய தனியறைக்கு செல்ல எல்லோருக்கும் அனுமதி கிடையாது. தனிச் செயலாளரான ராகினிக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது என்னை சுவாமியின் சேவைக்கு என்று அனுப்பினார்கள். அங்கு சென்றதும் அவரது மூளைச்சலவை தொடங்கியது.

மதுரபாவா நிலை என்று சொல்லி ராதைபோல் இருக்க வேண்டும் என்று தேனொழுக பேசி விழுங்கி விட்டார். அவரது பேச்சை நம்பி கடவுளாகவே அவரை நினைத்து பலமுறை என்னையே அவரிடம் கொடுத்துவிட்டேன். அவரோடு வட இந்திய சுற்றுப்பயணம் சென்றபோது புண்ணியத் தலங்களில் வைத்தும் என்னிடம் லீலை புரிந்தார். அவரோடு இணைய தயங்கிய வேளைகளில் என் கன்னத்தில் அறைந்த சம்பவங்களும் உண்டு. அவரது பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நித்தியானந்தா பீட பொறுப்பாளரான வினய் பரத்வாஜ் என்னை தொடர்பு கொண்டு நித்தியானந்தா ஓரின சேர்க்கைக்கு நிர்ப்பந்தப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டார். நீயும் அவரால் சீரழிக்கப்படுவதாக அறிந்தேன் என்றார். நான் அவரிடம் மறுத்து விட்டேன்.

ஆனால் இதே கேள்வியை லெனின் கருப்பன் கேட்டபோதும் முதலில் மறுத்தேன். பின்னர் மறைக்க முடியாமல் அழுதுவிட்டேன். அதன்பிறகுதான் படுக்கையறை தில்லுமுல்லுகளை படம் பிடிக்கும் திட்டம் உருவானது. நித்யானந்தாவின் அனுமதியுடன் காற்றை சுத்தப்பத்தும் ஒரு ஏர்பியூரிபயரை அவரது அறையில் பொருத்தினேன். அந்த பியூரிபயர் ஸ்பை காமராவுடன் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது ஆகும்.

காமராவை 2 நாள் கழித்து பார்த்தபோதுதான் அதில் ரஞ்சிதாவுடனான செக்ஸ் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த விஷயத்தில் ரஞ்சிதா என் இலக்கு அல்ல. அந்த சம்பவத்தோடு அவர் திருந்தி விடுவார் என நினைத்தோம். ஆனால் பலரை வழக்கு போட்டு பழிவாங்கி வருகிறார். எனவே நான் பெங்களூர் போலீசில் உண்மைகளை சொன்னேன்.

ஆசிரமத்தில் என்னை இழந்த கதைகளை சொல்லி என் கணவரிடம் அழுதேன். அவரும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார். ஆனால் என்னையும், என் கணவரையும் குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தியதால் இப்போது என் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். நித்தியானந்தா அமெரிக்க கோர்ட்டில் போட்ட வழக்கால் 6 மாதத்தில் 30 லட்ச ரூபாயை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். அவர் எதிர்பார்ப்பது போல் நான் மூலையில் முடங்கப்போவதில்லை. எனது போராட்டத்தால் பத்து பெண்கள் நித்யானந்தாவிடம் சிக்காமல் தப்பினால் கூட போதும்.
என்னைப் பொறுத்தவரை நித்தியானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். அவரது நடவடிக்கைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.

நித்தியானந்தா- ரஞ்சிதா சி.டி. உண்மையானது என்று இந்திய அதிகாரிகள் கூறிவிட்டனர். அமெரிக்காவிலும் பிரபலமான நிபுணரிடம் அந்த சி.டி.யை ஆய்வு செய்து உறுதி செய்து விட்டேன். ஒருபோதும் நித்தியானந்தா தப்ப முடியாது என்று கூறியுள்ளார் ஆர்த்தி ராவ்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!