செவ்வாயில் மரக்கறி தோட்டம்: நாஸா


avatar

செவ்வாயில் அல்லது சந்திரத் தரையில் மரக்கறி தோட்டம் ஒன்றை அமைக்கலாம் என்று அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்கள்.
எதிர்காலங்களில் சந்திரத் தரையை அடைய இருக்கும் விண்வெளி வீரர்கள் அங்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லாமல் அங்குள்ள காய்கறிகளை உண்பதன் மூலம் உயிர்வாழ இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
குளிர் நாடுகளில் வெப்பமூட்டப்பட்ட கண்ணாடி வீடுகள் அமைக்கப்பட்டு, வெப்பவலய தாவரங்கள் வளர்க்கப்படுவதுபோல செவ்வாயிலோ அல்லது சந்திரனிலோ கண்ணாடிக் கூடுகளை அமைத்து அவற்றில் பழங்கள் மரக்கறி போன்றவற்றை வளர்க்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள யோன்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் பொருட்டு பத்து வகையான தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, பசளிக்கீரை, கரட், பெர்ரிப்பழ மரங்கள் இவற்றுள் முக்கியமானவையாகும்.
சந்திரத் தரையிலும், செவ்வாய் தரையிலும் இந்த பத்துவகையான தாவரங்களால் மூச்சுப்பிடித்து வளர முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
சந்திரமண்டலத் தரையில் கோட்டல் அமைத்து உல்லாசப் பயணிகளை அங்கு கொண்டு செல்லலாம் என்ற கனவின் முதல் படியாக இந்தத் தோட்டங்கள் விண்வெளி பயணிக்க இருக்கின்றன.
இது இவ்விதமிருக்க :
புவி வெப்பமடைவதால் புவியில் மனிதன் வாழ இயலாத சூழல் ஏற்படும்போது அதிகாரமுள்ள மனிதன் அண்ட வெளிக்கு தப்பிப்போய் வேறு கிரகங்களில் வாழ்வான் என்றும் இதற்கான விசேட ராக்டெ;டுக்கள் தயாராகிவிட்டதாகவும் கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகள் கூறுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் முற்றாக வெடித்துச் சிதறிய கிரகமென்றின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது தெரிந்ததே.
இந்தக் கிரகத்தில் உள்ள விஞ்ஞானிகள் பொறாமை காரணமாக அணு குண்டுகளை பயன்படுத்து முழு கிரகத்தையும் அழித்துள்ளதாக வெலிக்கோவ்சி என்ற ரஸ்ய விஞ்ஞானி குறிப்பிட்டிருந்தார்.
இப்போதும் உடைந்த கிரகங்களின் துசிகள் பல்லாயிரம் தொன் கணக்கில் புவி மீது படிந்து வருகிறது.
மனித குலம் கிரகம் விட்டு கிரகம் மாறும் ஒரு இனமா..?
ஒரு கிரகத்தை முற்றாக அழித்துவிட்டு இன்னொரு கிரகத்திற்கு மாறலாம் என்ற கற்பனைக் கதைகள் மெல்ல மெல்ல நிஜமாகி வருகிறதா..?
இப்படி கற்பனைகள் விரிவடைகின்றன.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!