சின்னத்திரையிலும் கலக்க வருது காஞ்சனா பேய்!


avatar

சின்னத்திரையிலும் கலக்க வருது காஞ்சனா பேய்! Kanchana
நடன இயக்குனர், ஹீரோ, இயக்குனர், ஆன்மிகவாதி, சமுகசேவகர் என ராகவா லாரன்ஸுக்கு பல முகங்கள் இருந்தாலும், அவருக்கு சூப்பர் ஹிட் இயக்குனர் என்ற அடையாளத்தைக் கொடுத்து விட்டது அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம்!
வெறும் இரண்டு கோடி ரூபாயில் எடுக்கபட்ட இந்தப்படம், 25 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது. மேலும் இந்தப் படத்தின் ரீமேக் உரிமை இந்தியாவின் எல்லா முக்கிய மொழிகளிலும் கனிசமான விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் காஞ்சனாவின் மூன்றாம் பாகத்தை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் லாரண்ஸ், அதற்கு தமன்னாவின் கால்ஷீட்டை எதிர்பார்த்து காத்திருகிறார்.
காஞ்சானா மூன்றாம் பாகத்துக்காக தமிழ் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஆனால் முன்றாம் பகம் வெளிவரும் முன்பே விஜய் டிவி புத்திசாலித்தனாமாக முந்திக்கொண்டிருகிறது. காஞ்சனா என்ற தலைப்பிலேயே புதிய அமானுஷ்யத் தொடரை தொடங்குகிறது! வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ‘இந்த புத்தம் புதிய தொடரை ஒளிபரப்பு செய்ய ஆரம்பிக்கிறது. பூஜா இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இந்த தொடருக்கான கதாநாயகி தேர்வுக்காக நூற்றுக்கணக்கான பேருக்கு தேர்வு நடத்தில் இறுதியில் பூஜாவை தேர்வு செய்திருக்கிறார்கள்.
அழகர் இயக்க இந்தத் தொடர் ஒரு அழகான கிராமத்திற்கு நேயர்களை அழைத்துச் செல்கிறது. கல்வி மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் வாழும் காஞ்சனா தன் கிராமத்தையும், தன் தாத்தா பாட்டியையும் பார்க்கும் ஆவலில் அவளது கிராமத்திற்கு வருகை தருகிறாள்.
காஞ்சனாவை பார்க்கும் அவளது சொந்தங்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்களுக்குள் அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து கவலை தொற்றிக்கொள்கிறது. அதற்கான காரணம் என்ன. அவள் எதிர் நோக்கும் சம்பவங்கள் பல அவளை பல உண்மைகளை அறியத்தூண்டுகிறது. அவள் ஆசையாக விரும்பி வாங்கும் ஒரு பட்டுப்புடவையில் நைதிருக்கும் படங்கள் அவள் வாழ்க்கையில் நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்களை குறிக்கின்றன.
ஒரு புதிராக செல்லும் அவளது வாழ்க்கையில் அவளுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கின்றன. அதில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? அவள் யார்? எதற்காக அவள் அந்த ஊருக்கு வரவேண்டும்? காஞ்சனா என்பவள் ஒரு தனி நபர் அல்ல, அவளைப்போன்று ஏழு சக்தி உள்ளன என்ற உண்மையை அவள் அறியும் நேரம் வருகிறது. அந்த சக்திகளை அவள் தேடிச்செல்வாளா? காஞ்சனா தொடரை விருவிருப்பாகவும், மர்மங்கள் நிறைந்த தொடராகவும் வழங்கவிருக்கிறார் அழகர். வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் திங்கள் – வெள்ளி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் காஞ்சனாவுக்கு ஆதரவு பெருகினால் வாரத்தில் ஐந்து நாட்கள் என்று மாற்ற இருக்கிறார்களாம்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!