அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு – இனியா முத்தக்காட்சி!


avatar

அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற குடும்ப படங்களை இயக்கிய டைரக்டர் தங்கர் பச்சான், தற்போது அம்மாவின் கைப்பேசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதிகளின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். படத்தில், இரண்டு பேருக்கும் முத்த காட்சி இருக்கிறது. சாந்தனுவின் உதட்டில் இனியா முத்தம் கொடுப்பது போல் அந்த காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி டைரக்டர் தங்கர்பச்சான் அளித்த பேட்டியில், ஒரு கிராமத்தில், 8 பிள்ளைகள் பெற்ற ஒரு தாயின் கதை இது. கதைப்படி, எட்டாவதாக பிறந்த கடைசி பிள்ளை, சாந்தனு. அவருடைய மாமா மகள் இனியா. சாந்தனு வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளத்தில் தனது முறைப்பெண்ணுக்கு உள்ளாடைகள் வாங்கிக்கொண்டு அவளுக்கு பரிசளிக்க செல்கிறான். அதை வாங்கிக்கொண்ட இனியா, அன்றைக்கு என்கிட்ட ஏதோ ஒண்ணு கேட்டியே… என்ன அது? என்றபடி சாந்தனுவை நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார். இந்த காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறோம், என்றார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!