ஆட்சி மாற்றத்தால் ஜெயா டிவி வளாகம் சுறுசுறுப்படைந்திருக்கிறது. கோச்சடையான், துப்பாக்கி, மாற்றான் என்று வரிசையாக வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஸ்வரூபம் பற்றி மட்டும் எந்த சேதியுமில்லை.
கமல் படத்தை டீலில் விட்டுவிட்டார்களா என்று தேடிப் பார்த்தால் விஜய் டிவிக்கு படத்தை கமல் தந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தப் படத்தையும் சின்சியராக விளம்பரப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே சாய்ஸ் விஜய் டிவி. சன் டிவி விழுந்து பிடுங்கிற ரகம். நொடிக்கு மூன்று விளம்பரம் போட்டு எரிச்சலை கிளப்புவார்கள். விஜய்யில் விளம்பரமே கிரியேட்டிவாக இருக்கும். இதனால் விஜய்க்கு விஸ்வரூபத்தை தரவே கமல் விருப்பப்பட்டாராம்.
மிகப்பெரிய தொகைக்கு விஜய் விஸ்வரூபத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.