கேரளா திரை விருதுகள் – சிறந்த நடிகை ஸ்வேதா மேனன்


avatar

சென்ற வருடத்திற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்தப் படத்துக்கான விருது இந்தியன் ருப்பீ படத்துக்கு கிடைத்துள்ளது. ‌ரியல் எஸ்டேட்டின் தில்லு முல்லுகளை மையப்படுத்தி ரெஞ்சித் இயக்கிய படம். பிருத்விரா‌ஜ், திலகன் என்று முக்கிய நடிகர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ரேவதியும் சின்ன ரோல் ஒன்றில் நடித்திருந்தார்.

சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு பிளெஸ்ஸி தேர்வாகியுள்ளார். பிரணயம் படத்துக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. மோகன்லால், அனுபம் கெர், ஜெயப்ரதா நடித்தப் படம். ஜெயப்ரதாவின் முதல் கணவர் அனுபம் கெர். அவரைவிட்டு பி‌ரிந்தபின் மோகன்லாலை திருமணம் செய்து கொள்வார். வயதான காலத்தில் மீண்டும் அனுபம் கெர்ரை சந்திக்கையில் ஏற்படும் அனுபவக் காதலே கதை.

சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர் திலீப். படம் வெள்ள‌ரிப்பிறாவின்றே சங்காதி. சிறந்த நடிகை ஸ்வேதா மேனன். சென்ற வருடம் மலையாள சினிமாவுக்கு பூஸ்ட் அளித்த சால்ட் அண்ட் பெப்பர் படத்தில் நடித்ததற்காக இந்த விருது ஸ்வேதா மேனனுக்கு கிடைத்துள்ளது. தமிழில் இவரை கவர்ச்சி நடிகையாகவே அறிவர். ஆனால் ஸ்வேதா மேனன் சிறந்த நடிகை. லாலும், இவரும் நடித்த சால்ட் அண்ட் பெப்பர் குறைவான பட்ஜெட்டில் ஆர்ப்பாட்டமில்லாமல் வந்த நல்ல படம். பாபுரா‌ஜ் என்ற வில்லன் இதில் குணச்சித்திர நடிகராக கலக்கியிருந்தார். இதுபோன்ற சின்ன பட்ஜெட் நல்ல படங்கள்தான் தமிழுக்கு எப்போதும் தேவை.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!