ஏழைகள் கல்விக்கு உதவுங்கள்: சூர்யா, கார்த்தி பேச்சு


avatar

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் ஊனமுற்றோருக்கும் கல்வி உதவி வழங்கும் விழா தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் இன்று நடந்தது.

20 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இவற்றை வழங்கினார்கள்.

விழாவில் சூர்யா பேசியதாவது:-

கல்விக்கு செய்கிற உதவி ஒருவருக்கு காலத்துக்கும் பயன்படும். அகரம் பவுண்டேஷன் சார்பில் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறோம்.

உணவு, உடை, இருப்பிடம்போல கல்வியும் அடிப்படை தேவையாக உள்ளது. கல்விக்கு பண உதவி மட்டுமின்றி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறோம். ஒவ்வொருவரும் முடிந்த உதவிகளை ஏழைகளின் கல்விக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்த்தி பேசும்போது, அப்பா, அண்ணனைவிட அதிகமாக ஏழைகளுக்கு நற்பணிகள் செய்ய ஆசைப்படுகிறேன். அனைவரும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றார்.

சிவகுமார் மகள் பிருந்தா, அகரம் செயலாளர் ஜெயஸ்ரீ, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!