"அந்தப்பார்வை" படைப்புக்களத்தின் பரிசுப் போட்டிகளுக்கான விவரம்!!


avatar

இணைய உலகின் எழுத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் அன்பு வணக்கங்கள்! "அந்தப்பார்வை" படைப்புக்களத்தின் தொடக்கத்தினை மையமாக வைத்து, சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கும் விதத்தில் ஆரம்ப கட்டமாக ரூபாய் 6000/- ரொக்கப் பரிசு மற்றும் "ஒரு மாதத்திற்கான அளவில்லாத இலவச இணைய இணைப்பும்" வழங்க இருக்கின்றோம். அனைவரும் கலந்து கொண்டு பரிசினை தட்டிச்செல்ல அழைக்கின்றோம்.

தகுதி | விவரம் மற்றும் விதிமுறைகள்:

@. அந்தப்பார்வை படைப்புக் களத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.

@. போட்டிக்காக அனுப்பும் படைப்புகள் இதுவரை எந்த ஒரு இணையதளத்திலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.

@ முடிவுகள் வெளிவரும் வரை வேறு எந்தத் தளங்களிலும் வெளியிடக் கூடாது.

@. உறுப்பினரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.

@ கற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க எங்களுக்கு மனமில்லை. எனவே உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் விதமாக கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று எந்த அமைப்பிலும், காதல், நட்பு, சமுதாயம், குடும்பம், அரசியல், சினிமா போன்ற எந்த தலைப்பையும் மையமாக வைத்து எழுதலாம். தகுந்த தலைப்பின் கீழ், தலைப்புடன் தொடர்புடைய வகையில் அமையும் சிறந்த படைப்புகளுக்கு சன்மானம் வழங்கப்படும்.

உங்கள் படைப்புகள் கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

*ஆறுதல் பரிசாக 5 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கான அளவில்லாத இலவச இணைய இணைப்பு வழங்கப்படும்!!

மேலும் பரிசு விவரம், போட்டி தேதி, கடைசி தேதியும் பின்பு அறிவிக்கப் படும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதைத் தவிர மாதம் ஒரு முறை சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அந்த படைப்பாளர்களுக்கு ஊக்கப் பரிசாக ஒருவருக்கு ரூபாய்.1000/- வழங்கப்படும்

படைப்பாளர்களுக்கு மட்டும் தான் பரிசா? என்று கேட்க நினைக்கும் காப்பி | பேஸ்ட் நண்பர்களையும் நாங்கள் விடுவதாக இல்லை! உங்களுக்கும் பரிசு இருக்கிறது. ஆனால் முழுவதுமாக காப்பி | பேஸ்ட் செய்யாமல், இணையத்தில் நீங்கள் ரசிக்கும் பக்கங்கள், எந்த வகையில் உங்களைக் கவர்ந்தது? என்பதைப் பற்றி ஒரு சிறிய விமர்சனத்துடன் பகிர்ந்து, அந்தப் பக்கத்திற்கான இணைப்பையும் கொடுத்து பரிசினை தட்டிச் செல்லலாம். சிறந்த பக்கங்களை, அழகிய விமர்சனத்துடன் பகிர்பவர்களுக்கு ஊக்கப் பரிசாக "ஒரு மாதத்திற்கான அளவில்லாத இலவச இணைய இணைப்பு" வழங்கப்படும்


குறிப்பு:
அனாவசிய அரட்டையில் ஈடுபடும் நபர்கள் சிறந்த படைப்பை அனுப்பியிருந்தாலும் அதை ஆறுதல் பரிசுக்கே எடுத்துக் கொள்ளப்படும்!

முகவரி, தொலைபெசி எண் போன்ற உன்மையான சுயவிவரங்கள் சமர்ப்பிக்காதவர்களின் படைப்புகள் போட்டிக்கு அனுமதிக்கப் படாது!To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
Priya Dharsani

வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
Welcome Welcome

avatar

Anushya wrote:வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
Welcome Welcome

வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஆமா.... யாருமே சரியா எழுதலைன்னா பரிசுகள் எல்லாம் எனக்கா?..

Priya Dharsani

Shakthi wrote:
Anushya wrote:வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
Welcome Welcome

வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஆமா.... யாருமே சரியா எழுதலைன்னா பரிசுகள் எல்லாம் எனக்கா?..

அரட்டை அடிக்கிறவங்களுக்கு எல்லாம் பரிசு கிடையாது! lol!

avatar

அப்படின்னா அந்த அரட்டையை நீக்கிடுங்க.

Priya Dharsani

Shakthi wrote:அப்படின்னா அந்த அரட்டையை நீக்கிடுங்க.

அரட்டையை நீக்க மாட்டோம்.. உங்களையே நீக்கிடுவோம்.!
Fight

avatar

ஏன் எங்களுக்கு உங்களை நீக்க தெரியாதா? வேண்டாம்... சொல்லிபுட்டேன். Basketball

Priya Dharsani

சரி சரி விடுங்க...
flower

avatar

Anushya wrote:சரி சரி விடுங்க...
flower
அந்த பயம் இருக்கட்டும்! Very Happy

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!