கமல் என் ரசிகர் : டெல்லி கணேஷ்


avatar

கமல்ஹாசனுக்கும் எனக்கும் இருக்கும் நட்பு முப்பது ஆண்டுகளுக்கு மேலானது என்று என்று நடிகர் டெல்லிகணேஷ் கூறியுள்ளார்.
பசி திரைப்படத்தில் அப்பாவி ரிக்சாக்காரராக வந்த டெல்லி கணேஷ் இன்றைக்கு செல்லமே சீரியலில் வில்லத்தனம் செய்து வருகிறார். அவரது திரையுலக, சீரியல் பயணம் குறித்து என்டிடிவியில் சந்திப்போமா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் கமல்ஹாசனுடன் ராஜபார்வையில் தொடங்கிய நட்பு இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது அதற்குக் காரணம் கமல்ஹாசன் தன்னுடைய ரசிகர் என்பதால் கூட இருக்கலாம் என்று கூறிய டெல்லி கணேஷ் கமலுடனான தனது நட்பை பகிர்ந்து கொண்டார்.
ராஜபார்வை படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது முதன் முதலாக கமலைப் பார்க்க நேரிட்டது. அவரைப் பார்த்து நான் உங்கள் ரசிகன் என்று கூறிய நேரத்தில் உடனே அவர் நான்தான் உங்கள் ரசிகன் என்று கூறியது பெருமையாக இருந்தது என்று கூறினார் கணேஷ்.
வில்லனோ, காமெடியனோ என்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியவர். அவ்வை சண்முகியில் எனக்காகவே சிறப்பான காமெடி காட்சியை உருவாக்கியவர் கமல் என்று பெருமையாய் கூறினார். இருவருக்கும் இடையே உள்ள அன்டர்ஸ்டான்டிங்தான் இதுவரை நட்பு தொடர்வதற்கு காரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சினிமாவிற்கு அடுத்தபடியாக சீரியலில் கவனம் செலுத்தி வருவதாக கூறிய டெல்லி கணேஷ், சினிமாவோ, சீரியலோ கவனம் செலுத்தி நடித்தால் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும் என்று கூறினார். தன்னுடைய 30 வருட சினிமா வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட பாடமும் அதுதான் என்றும் அவர் கூறினார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!