தடைகளைப் பற்றி கவலையில்லை – மகாலட்சுமி


avatar

புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளின் மனதில் கோபத்தை உண்டுபண்ணுகிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இருமலர்கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார்.
சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்​தி​லேயே தனக்​கென்று ஒரு இடத்​தைத் தக்க வைத்​துக் கொண்​ட​வர் மகாலட்சுமி. இப்போது செல்லமே, இருமலர்கள், உதிரிப்பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்​பட்ட தொடர்​களை கைவ​சம் வைத்​துக் கொண்டு,​​ ​படு பிஸி​யாக இருக்​கும் மகாலட்சுமி, தனது சின்னத்திரை பயணம் பற்றி கூறுவதைக் கேட்போம்.
என்னுடைய சின்னத்திரை பயணம் சன் மியூசிக்கில் காலை நேரத்தில் வாழ்த்தலாம் வாங்க நிகழ்ச்சியில் ஆரம்பித்தது இப்போது சீரியல்களில் தொடர்கிறது. நடிக்​க​ணும் என்ற ​ எண்​ணமே கிடை​யாது.​ நிகழ்ச்சி தொகுப்போ,​​ சீரி​யலோ இரண்டுமே தானா​க​வே​தான் அமைந்​தன.​
அம்மா சுபி.​ அப்பா சங்​கர் அவர் சினி​மா​வில் ​ கொரி​யோ​கி​ராபி பண்​ணிக்​கிட்டு இருக்​கார்.​ தம்பி பன்னி​ரெண்​டாம் வகுப்பு படித்து கொண்​டி​ருக்​கி​றான்.​ அம்மா எக்ஸ்​போர்ட் பிஸி​னஸ் பண்​ணிக்​கிட்டு இருந்​தாங்க.​ அவுங்​க​ளுக்கு திடீர்ன்னு உடம்பு சரி​யில்​லாம போன​தால நான்​தான் பிசி​ன​ஸைப் பார்த்​துக்​கிட்டு இருந்​தேன்.​ அப்போ என் பெரி​யம்மா மகள் நீபா​ மூல​மா​கத்​தான் எனக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு வந்தது.
என்​னோட முதல் தொடரே ராதிகா மேடம்​கூட பண்​ணு​கின்ற வாய்ப்பு கிடைச்​சது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது.​ நடிக்க வரு​வ​தற்கு முன்பே அவுங்​க​ளோட ரசிகை நான்.​ எனக்கு அவுங்​களை ரொம்ப பிடிக்​கும்.​ அவுங்​க​ளோட பழ​கும்​போது அவுங்க கேரக்​டர் ரொம்ப பிடிச்​சது.​ ​ அப்​படி பிடித்​த​வர்​க​ளோட சேர்ந்து நடித்​தது ரொம்ப சந்​தோ​ஷமா இருந்​தது.​
சீரியலில் எனக்கு நெகடிவ் ரோல்தான் அதிகமாக கிடைக்கிறது. சாதரணமாகவே எனக்கு நெகட்​டீவ் ரோல் ரொம்பப் பிடிக்​கும்.​ பாஸிட்​டிவ் ரோல் பண்​ணு​வ​தற்கு நிறைய பேர் வரு​வாங்க.​ ஆனால் ஒரு சிலர்​தான் நெகட்​டீவ் ரோல் பண்​ணு​வார்​கள்.​ நெகட்​டீவ் ரோல் ரொம்ப சேலஞ்​சிங்கா இருக்​கும்.​ பாஸ்ட்​டீவ் ரோலை விட நெகட்​டீவ் ரோல் பண்​ணும் போது மக்​கள்​கிட்ட நல்ல ரீச் கிடைக்​கும்.​
நான் பரதநாட்​டி​யம் முறைப்​படி கற்​றுக்​கொண்​டேன்.​ அரங்​கேற்​றம் வரும் சம​யத்​துல டென்த் எக்​ஸாம் வந்​தி​டுச்சு.​ அத​னால அப்​ப​டியே நிறுத்​திட்​டேன்.​ அதுக்கு பிறகு தொட​ரு​வ​தற்கு டயம் கிடைக்​கல.​ ஆனா ஸ்கூல்ல,​​ காலேஜ்ல படிக்​கும்​போது நிறைய டான்ஸ் பெர்​பா​மன்ஸ் பண்​ணி​யி​ருக்​கேன்.​ ​ ஆனா ​ அக்கா அள​வுக்கு எல்​லாம் நான் டான்​ஸர் கிடை​யாது.​ அவ ​சூப்​பரா டான்ஸ்ல வெளுத்து வாங்​குவா.​ நான் எப்​படி சொல்லி கொடுக்​கி​றாங்​களோ அப்​ப​டியே ஆடு​வ​தோடு சரி.​

என்னை பொருத்​த​வரை எந்த ஒரு விஷ​யம் எடுத்​துக்​கிட்​டா​லும் அதில் உறு​தியா இருக்​க​னும்.​ அப்​போ​தான் ஜெயிக்க முடி​யும்.​ ஒரு விஷ​யம் பண்ண வேண்​டும் என்று முடிவு செய்​து​விட்​டால் அதில் எவ்​வ​ளவு தடை​கள் வந்​தா​லும் சரி கண்​டிப்​பாக செஞ்சி முடிச்​சு​டு​வேன் என்று கூறிவிட்டு சீரியலில் நடிக்க கிளம்பினார் மகாலட்சுமி.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!