சீரியலே போதும் சினிமா வேண்டாம்: மகேஸ்வரி


avatar

கருத்தம்மாவில் அறிமுகமாகி உல்லாசம், நேசம் என பெரிய திரையில் வலம் வந்தவர் மகேஸ்வரி. ஸ்ரீதேவியின் சகோதரி என்ற அடித்தளம் வேறு அவருக்கு இருந்தது. பெரியதிரையில் வாய்ப்புகள் குறைந்து போனதால் திருமணமாகி செட்டில் ஆனவர் திடீரென ‘சௌந்தரவள்ளி’ சீரியல் மூலம் ரீ என்ட்ரி ஆனார். தற்போது மெகா டிவியில் ‘மை நேம் இஸ் மங்கம்மா’ தொடரில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். குடும்ப வாழ்க்கைக்கு இடையே தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.
பெரியதிரையில் ஒரு படம் நடித்தால் மூன்று மணி நேரம் தான் ஆடியன்ஸ் மனதில் நிற்போம். ஆனால் சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்தால் இரண்டரை வருடம், மூன்று வருடம் என்று ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். எனவேதான் திருமணத்திற்குப்பின்னர் சின்னத்திரையை நான் தேர்ந்தெடுத்தேன். இது தவிர வேறு எந்த சிறப்புக் காரணம் எதுவுமில்லை.
நல்ல கதையாக இருந்தால் சின்னத்திரை பக்கம் வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததேன். அப்பொழுது கிடைத்ததுதான் “சௌந்தரவள்ளி’ வாய்ப்பு. ஏற்கனவே விஜய் டிவியில் தொடர்கள் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். இப்பொழுது மை நேம் இஸ் மங்கம்மா தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இது ஏற்கனவே தெலுங்கில் “மை நேம் இஸ் மதர்தெராஸா’ என்ற பெயரில் நான் நடித்த தொடர்தான்.
இந்த மாதிரியான காதாபாத்திரம் என்றெல்லாம் தேடி நடிப்பதில்லை. கதை கேட்கும் பொழுது பிடித்திருந்தால் செய்கிறேன். நெகடிவ் ரோல் கிடைத்தாலும் நடிப்போன். என் கணவர் ஜெயகிருஷ்ணா சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். எனவே ஆபிஸ், குடும்பம், நடிப்பு என இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் வேறு துறை பக்கம் கவனம் செலுத்துகிற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை. சின்னத்திரையே முழு திருப்தியாக இருப்பதனால், இப்போதைக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் இல்லை என்று கூறிவிட்டு மலர்ச்சியோடு சூட்டிங்கிற்கு செல்ல தயாரானார் மங்கம்மா ( மகேஸ்வரி)

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!