"பில்லா 2" கலெக்‌ஷன் ரிப்போர்ட் கேட்டார்: ஹார்ட் அட்டாக் வந்தது


avatar

"பில்லா2"வின் மும்பை தயாரிப்பாளர்களும், மொத்தமாக வாங்கி தமிழகம் முழுக்க விநியோகித்த ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனும், படத்தில் வருகிற காட்சிகளை விட மோசமான லாஜிக்கோடு நியூஸ் பேப்பர்களுக்கு தருகிற

கலெக்‌ஷன் ரிப்போர்ட் ஒரு கதகளியான காமெடி. இவற்றை படத்தில் வைத்திருந்தால் ஒரு வேளை காமெடி இல்லாத குறை நீங்கி படம் நல்லா கல்லா கட்டியிருக்குமோ என்னவோ?

அவர்கள் தரப்பு ரிப்போர்ட்படி ‘பில்லாவின் முதல் மூன்று நாட்கள் கலெக்‌ஷன் மட்டுமே 52 கோடிகளை தாண்டிவிட்டதாம். இந்த கலெக்‌ஷனாகப்பட்டது பில்லா ஒன்றைவிட சற்றே அதிகம், அதே சமயம் "மங்காத்தா"வை விட அதிகமோ அதிகம். [சகுனி கோஷ்டிகள் இப்படி ஒரு டுபாக்கூர் கலெக்‌ஷன் ரிப்போர்ட் சொல்லிவிட்டு அந்த நாளிலிருந்து தலைமறைவாக அலைவது தனிக்கதை]

அப்ப அஜீத் படம் நல்லால்லையின்னா கலெக்‌ஷன் அதிகரிக்கும்போல என்று அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் விஷ்ணுவர்த்தன் கன்ஃபியூஸ் ஆகி "பில்லா2" போல் ஒரு மொக்கைப் படம் எடுத்து ரசிகர்களை நோகடித்துவிடக்கூடாது என்பதற்காகவே கீழ்க்கண்ட தகவல்.

"பில்லா2" படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்கியிருந்த விநியோகஸ்தர் படத்தின் முதல் மூன்று நாட்கள் கலெக்‌ஷன் ரிப்போர்ட் கேட்ட்தோடு ஹார்ட் அட்டாக் வந்து கடந்த ஞாயிறு முதல் மருத்துவமணை ஒன்றில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

"அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது இன்ப அதிர்ச்சியில" என்று நாளையே காமெடிச்செய்திகள் வந்தால் அதற்கு நம் கம்பெனி பொறுப்பல்ல.

பி.கு; விஷ்ணுவர்த்தன் படத்தில் சிக்ஸ் பேக் தோற்றத்தில் வருவதற்காக தினமும் ஆறு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறாராம் அஜீத். உடற்பயிற்சி படங்கள் விஷ்ணுவர்த்தன் இணையதளத்தில் போட்டுவீட்டியவை.

பில்லா-2 வில் அஜீத் நடித்திருக்கும் ஹெலிகாப்டர் பைட் சீனில் நிஜமாகவே டூப் இன்றி அவர் ரிஸ்க் எடுத்து நடித்ததை கீழே பாருங்கள்(MP4 plugin needed).

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!