மாணவியை அவமானப்படுத்திய ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறை


avatar

கோவை: கோவை தடாகம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2008ல் 5ம் வகுப்பு படித்தவர் ஹரிகர சுதா. கடந்த 3.3.2008ல் இவர் இரட்டை ஜடை போடாமல் பள்ளிக்கு வந்தார்.பள்ளி விதியை மீறியதாக கூறி, உடற்கல்வி ஆசிரியர் ஷோபனா, அந்த மாணவியின் ஜடைமுடியை வெட்டி துண்டித்தார். முழங்கால் போட வைத்து தண்டனை அளித்தார். பள்ளி வளாகத்தில் அவமானத்தால் கூனி குறுகிய மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். அப்போது இப்பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்டிஓ விசாரணை நடத்தி, நடந்தது உண்மைதான் என அறிக்கை அளித்தார். இதையடுத்து ஆசிரியை ஷோபனா மீது, இந்திய தண்டனை சட்டம் 323 (சிறுகாயம் ஏற்படுத்துதல்), 342 (குழந்தையை அடக்கி வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோவை ஜே.எம். 7 கோர்ட் மாஜிஸ்திரேட் ஹேமந்த்குமார், ஆசிரியை ஷோபனாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!