அம்மாவின் கைப்பேசி


avatar

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் களவாடிய பொழுதுகள் போன்ற தரமான திரைப்படங்களை இயக்கிய தங்கர்பச்சான் தனது தங்கர் திரைக்களம் நிறுவனத்தின் மூலம் புதிய திரைப்படமொன்றை தயாரித்து இயக்குகிறார். அம்மாவின் கைப்பேசி என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படம், இவர் எழுதிய அம்மாவின் கைப்பேசி நாவலை திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம், இதுவரை இவர் இயக்கிய மற்ற திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கதைக்களம், தொழில்நுட்பம் உருவாக்கும் விதம் ஆகியவற்றில் புதிய பாணியில் உருவாகி வருகிறது.

கதையின் நாயகனாக சாந்தனு நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான அம்மா வேடத்தில் முக்கிய நடிகை ஒருவர் மீண்டும் நடிக்கிறார். இவர்களுடன் 75 புதுமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி மற்றும் மேட்டூரில் முக்கியமான இடங்களில் 25 நாட்கள் நடைபெற்று முடிந்தன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் ஜூலையில் நடக்க இருக்கிறது. ரோகித் குல்கர்னி என்ற புதுமுகம் இசையமைக்க, கிஷோர் படத்தொகுப்பு வேலையை கையாளுகிறார். கருப்பையா ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்‌கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தங்கர்பச்சன். மேக்ஸ்ப்ரோ எண்டர்டெயினர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தங்கர் திரைக்களம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!