மறந்து போன உறவுகளை சொல்ல வரும் பேச்சியக்கா மருமகன் !


avatar

இயக்குனர்கள் பூபதி பாண்டியன் மற்றும் மனோஜிடம் உதவியாளரை இருந்தவர் பாலகுமார். இவர் இயக்கி வெளி வர உள்ள முதல் படம் பேச்சியக்கா மருமகன். இந்த படம் குறித்து பாலகுமார் கூறுகையில், இந்த படம் முற்றிலும் மறந்து போன உறவுகளை மறுபடியும் நினைவு படுத்தும் படமாக இருக்கும், பொதுவா கிராமப் புறங்களில் மாமன், மச்சான், பங்காளி, அத்தை, மாமா என்று அத்தனை உறவுகளையும் கொண்டாடி கொண்டிருந்த காலம் உண்டு , கால மாற்றம் ஓட்டமும், நடையுமாக வாழ்க்கை ஓடி கொண்டிருப்பதில் உறவுகளை தொலைத்து எங்கோ எதையோ நோக்கி பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். இந்த நிலையில் மருமகனுக்கும் நடக்கும் ஒரு பாச போராட்டத்தை பந்தி வைக்க உள்ளது.. அத்தை மருமகனை மகனாக பாவிக்க வேண்டும் என்பதை சொல்லுகிறது. , இந்த படம் பார்க்கும் போது ஒவொருவரும் உறவின் வலியை உணர்வர் , இப்படியொல்லாம் இருப்பார்களா என்ற கேள்வி நம் இதயத்தை துளைக்கும், நடிப்பில் தனக்கென முத்திரை பதித்த ஊர்வசி அத்தை கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தன இயல்பான நடிப்பால் பேசப்பட்ட இயக்குனர், நடிகர் தருண் கோபி மருமகனாகவும், பெங்களூருவை சேர்ந்த புது முகம் நாயகியும், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படத்தை கொடுத்துள்ளேன், ரசிகர்களின் பதிலுக்கு காத்திருக்கேன் என்கிறார் இயக்குனர் பாலகுமார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!