விவாகரத்திற்கு பிறகு ஜோதிமயி மீண்டும் திரையில் !


avatar

தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஹரிகுமார் - ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள். கடந்த வருடம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

thinamalar.com

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!