தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியானார் பிரணாப் : பல்கலை., பாடப்புத்தகத்தில் தான் இந்த விநோதம்


avatar

கட்சிரோலி : நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கோண்ட்வானா பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகத்தில், பிரணாப் முகர்ஜி, நாட்டின் 14 வது ஜனாதிபதி என்று அச்சிடப்பட்டிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் இயங்கி வருகிறது கோண்ட்வானா பல்கலைக்கழகம். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டின் இளங்கலை அரசியல் அறிவியல் (பி.ஏ. பொலிட்டிகல் சயின்ஸ்) பிரிவின் முதலாமாண்டு மாணவர்களுக்கான இந்தியாவில் ஜனநாயகம் என்ற பாடப்புத்தகத்தின் 4வது பாடப்பிரிவின் 84வது பக்கத்தில் யூனியன் எக்ஸிகியூட்டிவ்ஸ் என்ற தலைப்பின் கீழ் நாட்டின் ஜனாதிபதிகளின் பட்டியலில், 14வது ஜனாதிபதி என்று பிரணாப் முகர்ஜியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

கோண்ட்வானா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்ட விழாவில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக கல்வி வாரியத்தின் தலைவர் சஞ்சய் கோர் மற்றும் பொலி்ட்டிகல் சயின்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு மாணவர் மதுகர் அர்ஜூன்கர் உள்ளிட்டோர் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் ஆவர்.

பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் இதுகுறித்து எவ்வித கருத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து அ.தி.மு.க. பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளின் ஆதர‌வு பெற்றவரும் மற்றும் லோக்சபா முன்னாள் சபாநாயகருமான பி ஏ சங்மா களம் காண்கிறார்

Thinamalar.com

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!