தெலுங்கு இண்டஸ்ட்ரிகு ஒஸ்தாரா சந்தானம்காரு?


avatar

கோடம்பாக்கத்தின் ஸோலோ காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானத்துக்கு இப்போது, மச்சம் மல்டி லாங்குவேஜ் பேச ஆரம்பித்திருக்கிறது.
ஏற்கனவே மலையாளத்திலிருந்து வந்த சில ஆஃபர்களை தனது மவுனத்தால் இழுத்தடித்துக்கொண்டு வந்த சந்தானத்தை, சமீபகாலமாக தெலுங்கு ஆஃபர்களும் அப்ரோச் ஆகி சபலப்பட வைத்துக்கொண்டிருக்கின்றனவாம்.
‘’தெலுகுல மஞ்ச்சி சேலரி இஸ்தாரண்டி ரண்டி’’ என்று தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் அழைப்புகளுக்கு காரணம் ,இப்போது தயாரிப்பில் இருக்கும் பெரும்பாலான படங்கள் தமிழ் தெலுங்காகவே தயாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது, அடுத்தபடியாக, சந்தானம் கடைசியாக தமிழில் கலக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை, பிரபல தயாரிப்பாளர் பெல்லகொண்டம் சுரேஷ் தெலுங்கில் டப் செய்து, நேரடி தெலுகு படம் போலவே பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம்.
ஆகஸ்டில் ’ஓகே ஓகே’ என்ற பெயரிலேயே ரிலீஸாகவிருக்கும் அப்படம் வெற்றிபெற்றால் சந்தானத்துக்கு தெலுங்கில் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகும் அதற்கு முன்பே அவரை கமிட் பண்ணிவைத்துக்கொள்வது தெலுகு தயாரிப்பாளர்களின் திட்டம்.
ஆனால் விவரத்துக்கெல்லாம் சவரம் செய்துவிடுகிற சந்தானமோ, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய், ‘’முதல்ல ஓகே ஓகே ரிலீஸாகட்டுமண்டி அப்புறம் பாக்கலாம்’’ என்று அட்வான்ஸ் எதுவும் வாங்காமல் எஸ்கேப் ஆகிவருகிறாராம்.
ஏற்கனவே சந்தானம் பற்றிய நியூஸ்களைப் படித்தாலே நொந்தானாம் என்று திரிகிற நம்ம காமெடியன்களுக்கு இது சமர்ப்பணம்.
hellotamilcinema.com

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!