’ராஜாவின் இசையில் மாய்ந்து மாய்ந்து பாடினார் ‘இளைய’ ராஜா!


avatar

சமந்தாவின் கால்ஷீட் பிரச்சினையால் சற்றே தாமதமாகிக்கொண்டிருக்கும் கவுதமின் ‘நீ தானே என் பொன் வசந்தம் ‘ஆடியோ ரிலீஸும் தள்ளிப்போவதில் ராஜா ரசிகர்களுக்கு ஏகப்பட்ட வருத்தம் தான்.
அவர்களை குஷிப்படுத்தும் நோக்கில் ‘நீ எ.பொ’ படத்துக்காக ஏற்கனவே கார்த்திக் பாடியிருந்த ‘ சாய்ந்து சாய்ந்து’ என்று தொடங்கும் பாடலை இளைய’ ராஜா யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்து பாடவைத்திருக்கிறார் கவுதம்.
இதுகுறித்து கவுதமிடமிருந்து போன் வந்தபோது, ‘’சும்மா காமெடி பண்ணாதீங்க சார். கார்த்திக்கையும், பவதாரிணியையும் விட்டுட்டு நான் பாடுனா மட்டும் அப்பா எப்பவும் கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பார்’’ என்ற யுவனிடம், ‘’ அதெல்லாம் பழைய கதை. வாங்க யுவன் அப்பாவும் நானும் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம்’’ என்று சர்ப்ரைஸ் கொடுத்தாராம் கவுதம்.
கவுதம் சொன்னதுபோலவே ராஜாவின் இசையில் ‘சாய்ந்து சாய்ந்து’ பாடலை மாய்ந்து மாய்ந்து பாடிய யுவன், ரெகார்டிங் தியேட்டரைவிட்டு வெளியே வந்தவுடன், கவுதமின் கையைப்பிடித்தபடி ‘ ஒரு நேஷனல் அவார்டு கிடைச்சிருந்தாக்கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேனான்னு தெரியாது. அப்பா மியூசிக்ல, அதுவும் உங்க படத்துக்கு பாடுனது அவ்வளவு சந்தோஷமா இருக்கு’’ என்றபடி விடைபெற்றாராம்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!